Jun 25 2010

உலக தமிழ் மாநாடு, தமிழுக்கான என் கவிதை

உலகத் தமிழ் மாநாட்டிற்காக என் பயணத்தை தொடங்கியோது, பயணத்தில்  செம்மொழியான என் தமிழ் மொழிக்காக ஏன் ஒரு கவிதை எழுதக்கூடாது என்று சில நிமடங்களில் யோசித்து எழுதிய கவிதை என் தமிழுக்காக இங்கே.


"உதிர்த்த உடனே அம்மா என்ற என் மொழி
மழலையாய் நான் கற்ற மழலை மொழி
செம்மொழியான என் தமிழ் மொழி!

பண்பை வளர்த்த பண்பாட்டு மொழி
கவிதைகளை  உருவாக்கிய  கன்னி மொழி
செம்மொழியான என் தமிழ் மொழி!

பகுத்தறிவை வளர்க்கும்  பக்குவ மொழி
உலகை ஆளப் பயணிக்கும் மொழி
செம்மொழியான என் தமிழ் மொழி!

இதயங்களை இணைக்கும் இனிய மொழி
இணையத்தில் வளரும் செம்மொழியாக  இங்கே!
இணைக தமிழ் இதயங்கள்! வளர்க தமிழ்!

ாழ்க தமிழ்,  வளர்க தமிழ்!

Comments

Add comment


(Will show your Gravatar icon)

  Country flag


  • Comment
  • Preview
Loading