Nov 03 2011

7 ஆம் அறிவு யாருக்கு வேண்டும்?

மனிதனுக்கு 7-ஆவது அறிவு மிகவும் முக்கியம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து, பொதுவாக இன்றைய மனிதர்கள் நிறைய பேருக்கு 6-வது அறிவே இல்லாமல் இருக்கும் பொழுது அதற்கு அடுத்த அறிவை பற்றிப் பேசுவது மிகவும் கடினமான ஒரு விடயம். கொஞ்சம் ஓவர்ன்னு சொல்லலாம்.

தொழில்துறை, சொகுசு வாழ்க்கை வளர்ச்சியில், நாம் நம் வாழ்விற்கு ஆதாரமான இயற்கையையே வழித்தடம் இல்லாமல் அழித்து கொண்டு வருகிறோம். நம்ம பயன்படுத்துற  தண்ணீர், காற்று, நில வளம்(கனிம வளம்), எண்ணெய் வளம்,  ஆகாயம் என எதையும் விட்டு வைக்காம முடிந்த அளவிற்கு எல்லாத்தையும் அழிச்சிட்டு, இனி வேண்டாம்  என்கிற குறிக்கோளுடன்  கலாச்சாரத்தை வளர்த்து வருகிறோம்.(இயற்கைதாங்க
7-ஆவது அறிவு)

சரி இப்படி ஒரு புறம் இருக்க, தினசரி வாழ்க்கையில் எந்த அறிவை நாம் அதிகமாக பயன்படுத்துகிறோம் என்பதும் கேள்விக்குறியாக மாறிக்கொண்டு இருக்கிறது.  சமுதாய மற்றும் கலாச்சாரம் பற்றிய பயம் சற்றும் இல்லாமல் இளைய சமுதாயத்தினர் வளர்ந்து கொண்டு இருப்பது மிகவும் சிந்திக்க வைக்கிறது. இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றார் போல் வளர்கிறார்கள் என்று சொல்வதோடு நிறுத்தி கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

காலை எழுந்தவுடன் தொலைக்காட்சி பெட்டியை தொடக்குவதிலிருந்து, கை தொலை பேசியில்   தலையை சாய்பதிலும், இன்றைக்கு எந்த சினிமா பார்க்கலாம், எந்த ஷாப்பிங் போகலாம் என மூளையயை பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள், அவர்களின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க தூண்டுகிறது.  இவற்றிற்கெல்லாம் மூல காரணமாக இருப்பது சினிமாக்களின் தாக்கம் என்பது எவரும் மறுக்க முடியாத காரணம்.

தினசரி வாழ்க்கையில..உட்காந்தா சினிமா, சாப்பிட போன  சினிமா,  அந்த ஹீரோ இப்படி, இந்த  நடிகை  அப்படி, அவளுக்கு  கல்யாணம் ஆச்சி, இந்த தேதில குழந்த பிறக்க போகுது,  அவங்க ரெண்டு பெரும் divorce வாங்கிட்டன்கலாம் என சினிமாவை பத்தி பேசறது கொஞ்சம் அதிகமாவே இருக்குதுங்க...சினிமாவ  பத்தி  blog எழுதறது. :)
எல்லாரோட தினசரி வாழ்க்கையே சினிமா ரேஞ்சுக்கு போயிட்டு இருக்கு.  சரி... இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க. இந்த TV  காரங்க பண்ற அட்டூழியம் தாங்க முடியலீங்க. நல்ல பண்டிகை நாள் கூட சினிமாகாரங்களா விட்ட வேற யாருமே கிடைக்கிறதே கிடையாது. பண்டிகை நாள் கூட வீட்டுக்கு வெளிய வந்து, அக்கம் பக்கத்து வீட்டுக்கு வந்திருக்கிற சொந்த காரங்க கூட பேசுவோம் என்கிற கலாச்சாரமே என்ன என்கிற நிலைமைக்கு வந்திடுசுங்க. .

சரி, நான் இங்க சொல்லவறது என்ன? ..அதாங்க இப்ப தீபாவளிக்கு வந்த 7 ஆம் அறிவு படத்தை பத்திதாங்க.  என்னோட தனிப்பட்ட விமர்சனமா. படம் நல்ல முயற்சி எடுத்து தயாரிச்சு இருக்காங்க. நடிச்ச எல்லாரும் நல்லாவே திறமை காட்டி  இருக்காங்க, படத்தோட இயக்குநரையும் பாராட்டலாம். ஆனா இயக்குனர் நல்ல ஆராய்ச்சி  செஞ்சு படம் எடுக்கிறேன்னு சொல்லிட்டு. தேவை இல்லமா, குழந்தைதனமா, அனுபவம் இல்லாத இயக்குனர் மாதிரி படத்தோட மதிப்பை குறைக்கிற மாதிரி நிறையவே தப்பு செஞ்சு இருக்காரு.

பொதுவா சொல்லனும்ன தமிழ் பட வரிசையில இது ஒரு நல்ல படைப்புதாங்க. எல்லாரும் நிச்சயமா பாக்கலாம். யாரு இந்த படத்தை பாக்க, பேசக்கூடாதுன்னு கேட்டிங்கன்ன? சினிமாவ ரொம்ப நுணுக்கம பாக்கிறவங்க, சினிமா தொழில்ல இருக்கிறவங்க, அப்புறம் அரசியல்வாதிங்க.

நான் சொன்ன மாதிரி, இன்றைய இளைய சமுதாயம் சினிமாவ ஒரு பொழுது போக்கா பாக்காம, அன்றாட வாழ்க்கையோட பொருத்தி பார்க்கிற  நிலைமை இருக்கும் பொழுது. நிறைய முற்போக்கு எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் இந்த படத்த பாக்க சொல்லியும், பாத்தா தமிழ் நாட்டை, தமிழை வளர்த்திடுவோம்னு சொல்லி நிஜ வாழ்க்கைகூட சம்மந்தப் படுத்த சொல்றது  கொஞ்சம் ஓவர்ன்னு சொல்லி, இதோட என்னோட கருத்துக்கு முற்று புள்ளி வைக்கிறேங்க.

கடைசியா, ஒண்ணு சொல்லனும்னு ஆசைங்க..

"எனது இந்தியாவின் இளைய சமுதாயமே!, நல்லதாவோ  இல்ல கெட்டதாவே  இருக்கட்டும், சினிமாவை  நிஜ வாழ்க்கையோட தயவு செஞ்சு கலக்காதீங்க, பேசாதீங்க.
ஹீரோவையும், ஹீரோயினையும் அதிகமா நம்பினா, நம்ம நாட்டை  யாரு, எப்படி ஆட்சி செயறாங்கன்னு, நமக்கே தெரியாதுங்க.

அன்புடன்
கோ தேவராஜன்

Comments

11/4/2011 11:47:00 AM
Harikrishnan India
Harikrishnan
Dear Devaraj,
Your comment is also like the 7m Arivoo cinema. Please be clear in your point. Dont try to touch everything in one subject.

Regards
Harikrishnan. A
11/4/2011 1:40:05 PM
devarajan
Hari! Thanks for comment...Thats why I am insisting...we have to develop 6th sense first Smile

Add comment


(Will show your Gravatar icon)

  Country flag

biuquote
  • Comment
  • Preview
Loading