Jul 19 2010

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

முற்பகல் செய்யின்  பிற்பகல்  விளையும் என்னும் தமிழ்  பழமொழிக்கு   மிக  அருமையான  சக்தி  இருக்கிறது. ஏனென்றால் இந்த தத்துவத்திற்கு  இணையாக  என் அன்றாட வாழ்வில் நடந்த   உண்மை  சம்பவங்களை  இங்கே  பதிவு செய்ய விரும்புகிறேன்.
முதலாவதாக :- வழக்கமாக  நான்  அலுவலகத்திற்கு  வந்தாயிற்று , அன்று  மதியம்  இரண்டு  மணி  அளவில்  சென்னை, அடையாரில்  இருக்கும் IIT   கல்வி  நிறுவனத்திற்கு  சென்று  வியாபார  சந்திப்பை  முடித்துவிட்டு,  கிண்டி  நோக்கி  கவர்னர்  மாளிகை  சிக்னலை  என்னுடைய மோட்டார் பைக்  மூலம்  கடக்கும்பொழுது , அதே  வழியாக  வந்த  இன்னொரு  இரண்டு  சக்கர  ஓட்டுனர்  என்னை  கடந்து வந்து   என்  பைக்கின்   முன்னே  என்னை  இடைமறித்தார் , நானும்  என்னடா  இது,  என்ன  வில்லங்கம்!  என்று  வண்டியை  நிறுத்தி  என்னங்க  என்று  கேட்டேன் .

உடனே  அவர்  ஒரு  சிறிய கதை  சொல்ல  ஆரம்பித்துவிட்டார் , சார் நான்  Ashok Leyland  என்னும்  பெரிய  நிறுவனத்திலே  பணி புரிகிறேன், என்று  தனது  அடையாள  அட்டை  காண்பித்து . சார்! எனக்கு  இரநூறு  ரூபாய்  வேண்டும்.  என  வண்டியில்  பெட்ரோல்  தீர்ந்துவிட்டது  நான் சென்னையின்  மறு  முனையான  திருவெற்றியூர்  செல்ல  வேண்டும்  என்றும்,   என்னுடைய  பைக் Mileage  தருவதில்லை  என்று எனவே  கட்டாயம்  200 ரூபாய்  தரவேண்டும்  என்றார்.

முதற்கணத்தில் என்னடா இவன், பெட்ரோல்  வேண்டும்  என்று  சொல்லி  காசு  கேட்கிறான் , நம்மை  இலிச்சவாயன்  என  நினைத்துக்கொண்டான  என்று  நினைத்து, ஒரு  கணம்  யோசித்து.  சரி  அருகே  இருக்கும்  பெட்ரோல்  பங்கிற்கு  வாருங்கள்  என்று  அழைத்து,  பெட்ரோல்  போட்டுக்கொள்ளுங்கள்  என்று  கூறினேன். பங்கிற்கு  வந்த  பிறகு  100 ரூபாயக்கு  பெட்ரோல் மட்டும்  போடுங்கள்  என்றேன். அவர்  இல்லை  சார் என்றார், தயவு செய்து  200-க்கு   போடுங்கள்  என்றார் . நான்  முடியாது  100  மட்டும்தான்  முடியும்  என்று  அதற்கு  மட்டுமே  காசு  கொடுத்தேன்.  அந்த  பைக்  நண்பரும்  சரி  என்று  சொல்லி  உங்கள்  தொலைபேசி  எண்ணை  தாருங்கள்,   இந்த  பணத்தை  நான்  உங்களுக்கு திருப்பி கொடுத்த்டுவிடுகிறேன்  என்றார் நல்லது  என்று  சொல்லிவிட்டு  நம்பர்  கொடுத்த்விட்டு  என்  வழி சென்றுவிட்டேன்.

நான்  மீண்டும்  கற்ற  முட்டாளாக!  நடந்தவற்றை  என வீட்டில் அம்மவிடம்  தம்பியிடம்  கூறினேன். நல்ல வேளை அப்பொழுது எனக்கு திருமணம் முடியவில்லை, இல்லையெனில்  என் மனைவிக்கும் இந்த கதை சொல்லி...ஒரு வேளை சாப்பாடு கிடைத்திருக்காதோ என்னவோ?  மனைவிக்கு பதிலாக தம்பி..... நீ  ஒரு  ஏமாளி... கொடைவள்ளல் உன்னை  மாதிரி  ஒரு  ஏமாறும்  பேர்வழியை  பார்க்கவே  முடியாது, திட்டு  திட்டு  என்று  திட்டிவிட்டார்கள் . நான்  ஒரே  ஒரு எண்ணத்தில் உருதிபாட்டோடு  இருந்தேன். அதாவது  அவன்  உண்மையாக   பெட்ரோலும்,  காசும்  இல்லாமல்தான்  நம்  உதவியை  நாடினான் , பணம்  திருப்பித்  தராவிட்டாலும்  சேவையாக  நினைத்துக்  கொள்கிறேன், ஏமாற்றப்பட்டவனாகவே  இருக்கட்டும்  என்று.

இப்படியே  ஒரு  6 மாதங்கள்  கழிந்தன , அவர்   போனும்  செய்யவில்லை , காசும்  திருப்பித்தரவில்லை,  6 மாதங்களுக்கு  பிறகு  அவன்  எண்ணை  நிறுத்திய  அதே  ரோடு,  அதே  இடத்தில் என் இரு சக்கர மோட்டார் வண்டி  பெட்ரோல்  இல்லாமல்  நின்றுவிட்டது ச்சே!  என்னடா  என்று  வண்டியை  தள்ள  ஆரம்பித்தேன் , அனால்  எனக்கு  அதே  இடத்தில  நாம்  மற்றொவருக்கு  உதவியிருகிறோம்  என்று  நினைவும் வரவில்லை, அப்படியே  வண்டியை  தள்ளிக்கொண்டு போகும்பொழுது    50  வயது  மதிக்கத்தக்க  பெரியவர்  ஒருவர் ஸ்கூட்டரில்  வந்து  நிறுத்தி. தம்பி Any Problem? எதாவது  உதவ  வேண்டுமா   என்று  தானாக வந்து விசாரித்தார். என்ன ஒரு ஆச்சர்யம்! பெட்ரோல்  தீர்ந்துவிட்டது என்று தெரிவித்து, தாங்கள்  உபசரிப்புக்கு மிக்க  நன்றி நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்ல அவரும்  சரி  என்று  நிதானமாக சென்றுவிட்டார். எனக்கு  உடனே  மனதளவிலே  பழைய  உதவி  செய்தது ஜாபகத்திற்க்கு  வந்தது! அடடா கேட்டாலே உதவ  வராத இந்த சென்னை மாநகரில் ஒருவர் வழிய வந்து உதவி செய்ய முன்வந்த்தது எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது மட்டுமல்லாமல்,  நாம் செய்யும்  உதவிகளின் அருள் எவ்வளவு சக்தி வாய்ந்தவை என்று நினத்துக்கொண்டு  மிக  அருகிலேயே  இருந்த  பங்க்   சென்று  பெட்ரோல்  போட்டுகொண்டு  திரும்பினேன்.

ஆகா! அன்று நான் சற்றும் எதிர்பார்ப்பு இல்லாமல் செய்த உதவி, நல்லது என்று நினைத்து செய்த உதவி, பெற்றுகொண்டவர் நன்றி இல்லாதவராக, சூட்சியாக இருந்தாலும், செய்த உதவிக்கு நிச்சயம் பலன் அடைந்தே தீருவோம்!.


இரண்டாவதாக : இது சில  வாரங்களுக்கு  முன்பு  நடந்தது. நானும் எனது நண்பர்கள் 4  பேரும் ஒரு கல்லூரிக்கு தேர்வுக்காக சென்றிருந்தோம், அந்த கல்லூரி நகரத்திற்கு வெளியில் இருந்ததால், மணல்  சாலையாகவும், மேடு பள்ளமாகவும் இருந்தது. நானும் எனது நண்பர்களும் நடையாக  சாப்பிட்டு வரலாம் என்று நினைத்து நடந்த பொழுது, சாலையில் ஒரு பழைய ladies purse  இருப்பது போல் தெரிந்தது.  நண்பர்கள் அது மிகவும் பழையதாக  இருப்பதால் அதை உதாசீன படுத்திவிட்டு சென்றார்கள், நான் விடவில்லை யாருடையதாவது  தவறி இருக்கும் என்று எடுத்துப் பார்த்தேன், திறந்து பார்த்ததில் ஒரு சில நூறு ருபாய் நோட்டுக்களும், அடையாள அட்டை ,  புகைப்படங்கள் இருந்தன உடனே யாரவது தேடி வருவார்கள் என்றேன்! ஆச்சர்யம்  சொல்லிய 5 நிமிடத்திற்குள் ஒரு பெண் அவ்வழியே  எதையோ தேடிக்கொண்டு வந்துகொண்டு இருந்தாள், நாங்கள் குரல் கொடுத்து உங்களதா?  என்று வினவ ஆம் என்ற புன்னகையுடன் பெற்று சென்றால் அந்த அழகான கல்லூரி மாணவி.

அன்றைய மாலை நான் சிறுது முன்னதாக தேர்வை முடித்துவிட்டு,  ரயிலில் அமர்ந்து யோசித்து கொண்டு இருக்கும்பொழுது, ஹால் டிக்கெட்(Hall Ticket) எங்கே வைத்திருக்கிறோம் என்ற கேள்வி எழ தேடினேன், அது எனிடத்தில் இல்லை. உடனே கல்லூரியில்தான் தவறி விழுந்திருக்கும் என்று இரண்டு நண்பர்களுக்கு போன் செய்தேன் பலன் இல்லை. இரண்டு எண்களும் தொடர்புகொள்ளும் நிலையில் இல்லை சிறு பதற்றத்துடன் மூன்றாவது நண்பருக்கு போன் செய்ய, போன் ஒலித்தது,  ஹால் டிக்கெட்-ஐ பற்றி கூறியவுடன். இரண்டு நிமிடங்களில் நான் தேடிவிட்டு தொடர்பு கொள்கிறேன் என்றார். அடுத்த ஒரு நிமிடத்தில் என் போன் ஒலித்தது.  நண்பர் திரு.சாரதி கூறியது, தேவாநீங்கள் போன் செய்த உடன் நான் திரும்பி பார்த்த பொழுது ஒரு காகிதம் கீழே கிடந்தது தெரிந்தது, அது உங்களுடையதுதான், நான் எடுத்துக்கொண்டேன் உங்களிடம் சேர்த்துவிடுகிறேன் என்று போன்-ஐ துண்டித்தார்.

என்ன ஆச்சர்யம்! அங்கே தேர்வு எழுதியவர்கள் கிட்டத்தட்ட ஏழுநூறு பேருக்கு மேல் இருப்பார்கள் இருப்பினும் போனில் கிடைத்த நண்பருக்கே கிடைத்தது, காலையில் நான் எடுத்து உதவிய செயலே என்பதை என்னால் மனபூர்வமாக உணர முடிந்தது. எனவே ஒரு நல்ல செயலை நல்ல காரணத்திற்காக  செய்யும் பொழுது அதன் பின் விளைவுகள் என்னவாக இருந்தாலும், செய்த நல்ல பலனுக்கு பிற்பகலே நன்மை வந்து சேரும் என்பது என் அன்றாட வாழ்க்கை அனுபவம்!

Add comment


(Will show your Gravatar icon)

  Country flag

biuquote
  • Comment
  • Preview
Loading