Jul 01 2010

தமிழுக்கு மகுடம் சூட்டிய விழா, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு

மாநாடு அறிவித்து கிட்டத்தட்ட 6 மாத காலம் ஆகி, வேலைகள் நடந்துகொண்டே இருக்கின்றன என்றும், பல ஆயிர கோடி செலவில் கோயம்புத்தூர் நவீனபடுத்தப்படுகிறது  என்கிற செய்திகளை நாம் ஊடகங்கல் மூலம் படித்துக் கொண்டே இருந்தோம், செம்மொழி மாநாட்டு உடன், தமிழ் இணைய மாநாடு நடக்க இருக்கிறது என்பதையும் அனைவரும் அறிந்ததே. இதில் தமிழ் இணைய மாநாடு என்பது உத்தமம் என்னும் ( www .infitt .org),ஒரு லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனமாக 1997 -ல் இருந்து 9  இணைய மாநாடுகளை நடத்தி முடித்திருக்கிறது, 8 -வது மாநாடாக கடந்த வருடம் ஜெர்மனி, கோலன்  பல்கலைகழகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்து,  அதற்காக தமிழக அரசு அனைத்து   உதவிகளையும் அளித்து , கோலன்  பல்கலைகழகத்தில் பனிபுரியும் திருமதி உல்ரிகெ அவர்க்ல் பெரும் பங்கு வகித்து இருக்கிறார், இந்த ஆண்டு திருமதி உள்ரிகே அவர்கள் சிறப்பு விருந்தினராக செம்மொழி மாநாட்டில் சிறப்புரை ஆற்றினார்.

தமிழ் செம்மொழி மாநாட்டுடன்   இணைத்து  நடத்துவதற்கு  தமிழக அரசு விருப்பம் தெரிவித்து முனைவர் திரு அனந்த கிருஷ்ணன் தலைமையில், திரு வெங்கடரங்கன்,   உத்தமம் தலைவர்  திரு கவியரசன், , திரு.மணியம், திரு அண்டோ   மற்றும் பல செயல் உறுப்பினர்கள் விருப்பத்துடன் தமிழ் இணைய மாநாட்டை செம்மொழி மாநாட்டுடன் நடத்துவது என முடிவு செய்யபட்டு, ஜூன் 23 -27 ஆகிய தேதிகளில் மிக பிரமாண்டம்மாக   நடந்து முடிந்தது.


ஒரு உறுப்பினராக நான் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று 3 மாதங்களுக்கு முன்பே அதற்கான இணைய முகவிரியில் பதிவு செய்திருந்தேன். இந்த மாநாட்டில்  பங்கேற்றதின் மூலம், பல நாடுகளில் வாழும் தமிழ் ஆர்வலர்களையும், அவர்கள் மொழி மீது வைத்துள்ள நட்பின் மீதும் எனக்கு வியப்பு அளித்தது.

மாநாட்டையும் அதன் வெற்றியையும் சுருக்குமாக குறிப்பிட வேண்டும் என்றால், 2010 மாநாடு, "தமிழுக்கு மகுடம் சூட்டிய விழாவாக" ஏற்றுக்கொள்ளலாம். உலகத்திலே ஒரு மொழிக்காக இப்படி ஒரு மாநாடு நடத்தியது என்பது இதுவே முதல் முறையாக இருக்கும். இருப்பினும் இரண்டாவது பார்வையாக,  இந்த மாநாட்டை ஒரு அரசியல் நோக்கமாகவும், இலங்கை பிரச்சனயை மறைப்பதற்காக நடத்தப்பட்டது என்பதை விமர்சிப்பதை கேட்க முடிந்தது, எப்படி இருப்பினும். இந்த மாநாட்டை ஒரு கட்சியின் சாயம் இல்லாமல், மொழிக்காகவே நடத்தப்பட்டது என்பதை மாநாட்டில் பங்கு கொண்ட அனைவரும் உணர்ந்த விஷயம் என்றே என்னால் உறுதி செய்ய முடியும்.


தமிழ் இணைய மாநாட்டின் வெற்றிகளாக சிலவற்றை இங்கே பதிவு செய்ய முடியும்.

1 ) பள்ளி மாணவர்களுக்காக   நடந்த வண்ணம் தீட்டும் போட்டியில் கிட்டத்தட்ட 8000 மாணவர்கள் பங்கு கொண்டது.

2 ) Paintbrush  எனப்படும் சிறு மென்பொருளை கொண்டு தமிழ் சார்ந்த கருத்துக்களை சிறந்த வண்ணங்களாக தீட்டியது மிகவும் பாராட்டுக்குரியது.

3 ) ஒரு மொழியை Translation எனப்படும் வேறு மொழிக்கு மாற்றும் மென் பொருள் தயாரிக்கும் சிக்கல்களை அனைவரும் உணர முடிந்தது

4 ) சிறு குழந்தைகள் முதல்  முதியோர் வரை இணையம் மற்றும் கணினிகளில் எந்த எந்த முறையில் தமிழ் மூலம் தட்டச்சு செய்யவும், தமிழ் கல்வியாக பயிலலாம் என பல நுணுக்கமான கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன

5 ) தமிழ் எழத்துரு பிரச்சனைக்கு UNICODE முதன்மை எழுத்துருவாக தமிழக அரசு அறிவித்தது.

6 ) தமிழ் படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளில்  முன்னுரிமை

7 ) செம்மொழி அலுவலகம்

மற்றும் பல வெற்றிகரமான தமிழ் சார்ந்த தீர்வுகள் செம்மொழி மற்றும் இணைய மாநாட்டின் மூலமாக ஏற்கப்பட்டதும்,  என்னை பொறுத்தவரையில் இந்த மாநாட்டில் பங்கேற்றது ஒரு அறிய வாய்ப்பாகவும் , மாநாட்டில் என்னால் முடிந்த திறமைகளை ஒரு தன்னார்வலராக நிறைவேற்றியதும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.





Video Conference Demonstration of Tamil Rhymes, Between Chennai And USA, Pensylvania.
Mr.Eric Miller Demonstration.

பிஸ்கட் பிஸ்கட்
ஜாம் பிஸ்கட்
என்ன ஜாம்
கோ ஜாம்
என்ன கோ
டீ கோ
என்ன டீ
பன் டீ
என்ன பன்
ரிப்பன்
என்ன ரிப்பன்
பச்சை ரிப்பன்
என்ன பச்சை
மா பச்சை
என்ன மா
அம்மா
என்ன அம்மா
டீச்சர் அம்மா
என்ன டீச்சர்
கணக்கு டீச்சர்
என்ன கணக்கு
வீட்டு கணக்கு
என்ன வீடு
மாடி வீடு
என்ன மாடி
மொட்டை மாடி
என்ன மொட்டை
பழனி மொட்டை
என்ன பழனி
வட பழனி
என்ன வடை
ஆமை வடை
என்ன ஆமை
குளத்து ஆமை
என்ன குளம்
திரி குளம்
என்ன திரி
விளக்கு திரி
என்ன விளக்கு
குத்து விளக்கு
என்ன குத்து
கும்மாங் குத்து

Add comment


(Will show your Gravatar icon)

  Country flag

biuquote
  • Comment
  • Preview
Loading