மொழியும் நானும், Tamil Internet Conference 2010

Wednesday, 3 February 2010 14:51 by devarajan

எனக்கு  மொழிகளில் பற்று கொஞ்சம் அதிகம், நான் உயர்நிலை பள்ளியில் படிக்கும் போதே, என் தாயாரின் தூண்டுதலில், என்னுடைய தம்பி  ப்ராத்மிக் என்னும் 5 ஆம் வகுப்பிற்கான ஹிந்தி மொழியை பயின்றுவந்தான்.
அது சமயம், எனக்கும் ஆர்வம் இருந்ததால் ஹிந்தி எழுத்துக்களும், மா(aam), தேங்காய்(Naariyal), வா(Aao), போ(Jaao), என்னும் சிறு சிறு வார்த்தைகளை படிப்பதில், பேசுவதில் ஆர்வம் காட்டினேன். என்னுடைய தொழில் கல்வியை முடித்த பிறகு வட மாநிலங்களுக்கு சென்றபோது, ஹிந்தி பேசுவதில் புரிந்து கொள்வதில்  எனக்கு எந்த வித மொழி தட்டுப்பாடு இருந்ததில்லை உச்சரிப்பதிலும் முடிந்த அளவிற்கு துல்லியத்தை கொணர முடிந்தது .

கடந்த இரண்டு வருடங்களாக, ஒரு ஐரோப்பிய மொழியை பயில வேண்டும் என்கிற  ஆசையில் ஜெர்மனி மொழியை பயின்றேன். ( பல ஆயிரங்கள், இரு வருடங்கள் செலவழித்தும் இன்னமும் ஜெர்மனி மொழியை பயமின்றி பேச முடியவில்லை காரணம்!!! யோசிக்க வேண்டும?).

இருப்பினும், தமிழ் மொழியில் எப்போதும் ஒரு ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும். தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்கிற அடிப்படையில், எதாவது  செய்ய  வேண்டும் என்கிற நோக்கில், 1330 திருக்குறளை, ஐ-போன் என்னும் கைபேசிக்கு முற்றிலும் தமிழ் மொழிலயே ஒரு மென்பொருலாக  தயாரித்து, உலகமெங்கும்  இருக்கும் தமிழர்களுக்கு இலவசமாக பதிவிறக்கம் செய்ய வகை செய்தேன்.

இதனால் உலக தமிழ் சகோதரர்கள் பலரின் பாராட்டுகள் மற்றும் அன்பை பெற்றதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி. iPhone/iPod Touch users can Download here நேரம் கிடைக்கும் பொழுது, மேலும்  சில பதிவுகளை வெளியிட ஆசை படுகிறேன்.

உலக தமிழ் செம்மொழி  மாநாடு 2010, கோவை.

பல ஆண்டுகளாக உத்தமம் என்னும் தமிழ் இணைய குழு இருப்பது தெரிந்தும், கடந்த ஆண்டு, அக்குழுவில் ஒரு உறுப்பினராக சேர்ந்து இருக்கிறேன், அதன் மூலம், என்னுடைய பொழுதுபோக்கு அம்சமான கைபேசி தொழில் நுட்பங்களில் தமிழ் எவ்வாறு பயன்படுத்தலாம்!

தமிழர்கள் அனைவரும்  தாய் மொழியான தமிழில், எப்படி கருத்துக்களை  குறு செய்தியின் மூலம்  பரிமாற வைக்கமுடியும் என்கிற சிந்தனையில், முடிந்த சில நேரங்களை ஒதுக்க முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன்.
1949
களில் , திரவிட கட்சிகளின் வரலாறாக, இ.வே.ர. பெரியார் அவர்கள் நடத்திய, முத்தமிழ் மாநாடு கோவையில்  நடத்தி முடித்தார்.   2010-ல் திரு கலைஞர் அவர்கள், அந்த வரலாற்றின் தொடர்ச்சியாக, உலகச் செம்மொழி மாநாட்டை தனது வாழ்நாளில் நடத்தி முடிக்க ஆசைப்பட்டு, மாநாடு நடத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இந்த மாநாட்டின் இணையாக தமிழ் இணையம் என்னும் எங்கள் உத்தமத்தின் மாநாடு நடக்க இருக்கிறது. திங்கள் பல இருப்பினும், ஒரு குழுமத்தின் உறுப்பினராக, என்னால் முடிந்த அளவிற்கு சுய சேவைகளை செய்வது என்று முடிவு எடுத்து இருக்கிறேன்.

அந்த  மாநாட்டின் வலை இணைப்புகளை இங்கே குறிப்பிடுகிறேன். 

 

நன்றி
கோ.தேவராஜன்

INFITT, Inaiyam 2010, Kovai

World Classical Tamil Conference

Add comment




biuquote
  • Comment
  • Preview
Loading