பிரமிக்க வைக்கும் இன்றைய தமிழ் பெரியோர்கள்.

Monday, 26 October 2009 10:43 by devarajan


எனக்கு சிறு வயதிலிருந்தே ஒரு ஆசை, என்னுடைய வாழ்க்கையில் நான் பல பெரியோர்களின்(தார்மீக குரு) கையை பிடித்து, அவர்களின் அன்பை பெற்று வாழ்கையில் முன்னேற வேண்டும் என்று. (குரு & சிஷ்யன் பட நடிகர்களான  ரஜினி மற்றும் பிரபுவை  சொல்லவில்லை!)

ஆனால்  இன்று வரை, அத்தகைய பெரியோர்களை சந்திப்பதே மிகவும் பகல் கனவாகி/அரிதாகி விட்டது, இதற்கு பல காரணங்களை  சொல்லலாம், இன்று நாம் முயல நினைக்கும் அனைத்து சந்திப்புகளும் & சாதகங்களும் தொழில், பொருள் அல்லது   ஒரு மறைமுகமான நோக்கத்துடன் ஏற்படும் சந்திப்புகலாகவே இருக்கின்றன.(அரசியல் தலைவர்களையும் & சினிமா துறை சார்ந்தவர்களை சந்திப்பதில் கடினம் இல்லை)

அதற்கு  சில முக்கிய காரணங்களை  நிச்சயமாக  கூறலாம்,  நான் ஆராய  தொடங்கியபோது, சில முக்கிய காரணங்களை  என் மனதிர்க்கு தோன்றியதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். 

1) இளைய சமுதாயத்தினரிடையே பொது சேவை மனபான்மை குறைந்து வருவது.
2) அணைத்து உறவுகளுக்கு இடையே ஓர் மறைமுக  நோக்கமும், ஆதாயங்களும்.
3) அறியாமை.
4) பெரியவர்களின் நட்பை பெற நினைத்தும் அதற்கு உண்டான வழிமுறைகளை அறியாமல் இருத்தல்.
5) அத்தகைய பெரியவர்களின் காலநேரமின்மையும்.
6) கால நேரம் இருந்தும் பெரியவர்களை  அழைப்புகள் விடுத்து சந்திக்க ஏற்பாடு செய்ய மறுப்பது என பல காரணங்களை  கூறலாம்.

அத்தகைய கருத்துக்களை மனதில் கொண்டு, நான் இந்த பக்கத்தை பயன்படுத்தி, தமிழ் சார்ந்த பெரியோர்கள், (தமிழ் மொழியில் ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமல்ல,   பல துறைகளில், பல நாடுகளில் சிறந்து  விளங்கும் தமிழ் வம்சாவளியை சார்ந்த பெரியோர்கள், தங்களால் முடிந்தவரை வாரம்/மாதம்/வருடத்திற்கு   ஒரு பள்ளிகூடமோ அல்லது ஒரு கல்லூரியோ  என, இளைய சமுதாயத்தினரிடையே அருள் செய்து, தன்னுடைய வாழ்க்கை  வெற்றிக்கான காரணங்களையும், அறிந்த அறிவு ஆற்றலையும் பிரதிபலிக்க வேண்டும் என்று இந்த பக்கத்தின் மூலம் விண்ணப்பம் இடுகிறேன்!.

இதன் தொடக்கமாக, நான் இணையத்தளம் மூலம் அருள் பெற்ற திரு.ஜெயபாரதன், அணு சக்தி துறை வல்லுநர் மற்றும்  தமிழ் மொழி சேவையாளியை  நான் இங்கே குறிப்பிடுவதில் பெருமை படுகிறேன்.

அவருடைய வையகத் தமிழ் வாழ்த்து:

பாரத கண்டச் சீரிளம் தமிழே !
ஓரினம் நாமெலாம் ! ஒருதாய் மக்கள் !
வாழ்த்துவம் உனையே ! வணங்குவம் உனையே !
தாரணி மீதில்உன் வேர்களை விதைத்தாய் !
வேர்கள் தழைத்து விழுதுகள் பெருகின !
ஈழத் தீவில் இணைமொழி நீயே !
சிங்கப் பூரினில் துணைமொழி நீயே !
மலேசிய நாட்டில் தனிமொழி யானாய் !
காசினி மீதில் மேவிய தமிழே !
வாழ்த்துவம் உனையே ! வணங்குவம் உனையே !

ஆத்திச் சூடி ஓளவை, ஆண்டாள்,
வையகப் புலவர் வள்ளுவர், இளங்கோ,
பாரதி, கம்பர், பாரதி தாசன்,
யாவரும் உனது மாதவப் புதல்வர் !
மலைகடல் தாண்டி அலைகளைப் போல
ஆசியா, அரேபியா, ஆஃப்ரிக்கா, ஈரோப்,
வடஅமெ ரிக்கா, கனடா புகுந்து
சொந்த மாக்கினர், செந்தமிழ் மாந்தர் !
யாதும் நாடே ! யாவரும் கேளிர் !
பாதுகாத் துன்னைப் பரப்புதல் எம்பணி !
காசினி மீதில் நேசமாய் நிலவும்
மாசிலாத் தமிழே ! வாழ்த்துவம் உனையே !
வையகத் தமிழே ! வணங்குவம் உனையே !

 

Comments

February 23. 2010 11:36

I can see that you are an expert at your field! I am launching a website soon, and your information will be very useful for me.. Thanks for all your help and wishing you all the success in your business.

Discount magazines

Add comment




biuquote
  • Comment
  • Preview
Loading