Jul 30 2009

Ramayanam in Tamil - Part 3

அரக்கியர் சிலரை  அங்கே  சீதைக்குக்  காவல்  வைத்தான்  இராவணன். அதற்குப்  பொருத்தமான இடம்  மனைவி அசோகவனம்  ஆயிற்று.

இராவணனின்  தம்பி  வீடணனின்  மனைவி  திரிசிடை ஆவாள். அவளும்  அங்கே காவலுக்கு  இருந்தாள். நல்லவளான  அவள்  சீதைக்கு ஆறுதல்  சொன்னாள்.

    எப்பொழுதும்  இராவணன் சீதையின் நினைவாகவே இருந்தான். அதனால்  அடிக்கடி அசோகவனம் வந்தான்.  கெஞ்சியும் மிரட்டியும் அவளைப் பணிய வைக்க முயன்றான்.

  ஆனால் சீதையோ அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தன் கணவர் வருவார். தன்னைக்  காப்பாற்றுவார் என்ற  நம்பிக்கையில்  உயிரை வைத்துக்  கொண்டிருந்தாள்.

   அங்கே இராமன் . மாரீசன்  இறந்தபின் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தான். இலக்குவன்  செய்த  எச்சரிக்கை  முற்றிலும்  பொருத்தமானது.

  இராமன் குடிலை நோக்கி  விரைந்தான் . தம்பி எதிரே வருவதைப் பார்த்து அதிர்ச்சி  அடைந்தான்  இராமன். '' தம்பி! அந்தப்  பொன் மான் அரக்கரின் சூழ்ச்சி. அதைக் கொன்று  விட்டேன். சீதையைத் தனியே விட்டு வரலாமா?  அவளுக்கு என்ன துன்பம்  நேர்ந்ததோ?" என்று பதறினான்.

   தான் வர நேர்ந்த  சூழலை வருத்தத்துடன்  சொன்னான் இலக்குவன் . அவர்கள் இருவரும்  குடிலை நோக்கி  வேகமாக நடந்தார்கள்.

(53)(pagje)  குடிலை  அடைந்த  அவர்கள்  சீதையைத்  தேடினார்கள்.  அங்கே  சீதை  இல்லை.  சுற்றி  உள்ள இடங்களில்  எல்லாம்  தேடினார்கள்.

  எங்குமே  சீதை  கிடைக்கவில்லை. பித்துப்  பிடித்தவன் போல  ஆனான் இராமன். அங்கிருந்த  மரங்களையும்  விலங்குகளையும் பறவைகளையும் பார்த்தான். 

    '' சீதையை  நாம் மீண்டும்  காண்போமா?"  என்று  இராமன்  வருந்தினான். பின்பு  வனத்தில்  எங்கும் தேடிப் பார்க்கலானார்கள்  சகோதரர்கள்

இருவரும்.  வரும் வழியில்  மான் மந்தை  உன்றைப் பார்த்தார்கள். அப்பாவிகளாகிய  அவ்விலங்குகள்  வானத்தைப்  பார்த்துக் கொண்டு தென் திசையை  நோக்கி  நகர்ந்தன. சகோதரர்களும்  அதே  திசையை  நோக்கி  நகர்ந்தன.

   அதிவிரைவில்  கழுகு வேந்தன் ஜடாயு  அவர்களைச் சந்தித்தான் . அவனோ உடல்  முழுதும்  ரத்தம்  தோய்ந்தவனாகத்  தென்பட்டான்.  சக்தியை இழந்த  வந்த  பறவை எஞ்சியிருந்த  வல்லமையை எல்லாம்  சேகரித்துக்  கொண்டு  தான்  இராவணனோடு புரிந்த  போராட்டத்தை விளக்கியது.

   ''அரைத் தூக்கத்தில் இருந்த என்னைச் சீதையின் கூக்குரல்  தட்டி  எழுப்பியது. பொல்லாத இராவணன். அவளைச் சிறை  தூக்கிச்  சென்றதை நான் கண்டேன்.  அவனுடன்  போரிட்டேன். அவனை எதிர்த்து  அலகால் கொத்தவும்  நகங்களையும்  அவன்  துண்டித்துவிட்டான். சிறையெடுக்கப்பட்ட சீதை தனக்கு  நேர்ந்த  துயரத்தை உனக்குத் தெரிவிக்கும்படி  என்னிடம் பரிந்து வேண்டியதால்  குற்றுயிர்  உற்று  நான் இங்கு

நான் கிடக்கிறேன். தேடி  அவளைக்  கண்டுபிடிப்பாயாக. நீ  இராவணனைக்  கொன்று  சீதையை  மீட்டெடுப்பாய்" என்று  கூறி  ஜடாயு  உயிர் துறந்தான்.

ஜடாயுவின்  முடிவைக்  கண்டு  சகோதரர்கள்  இருவரும்  பெரிதும் வருந்தினர். அவனுடைய சடலத்தைத்  தகனம்  பண்ணி  ஈமக்கிரியைளையெல்லாம் முறைப்படி  செய்து முடித்தனர்.

  பின்பு  காட்டுக்குள்  பயணமானார்கள்.  தென்திசை  நோக்கி  பயணமானார்கள்  இருவரும். விலங்குகள் நிறைந்திருந்த  காட்டுக்குள்  ஒரு விபரீதமான ஜந்து ஒன்றைக்  காணலாயினர்.

  அது  சகோதரர்கள் இருவரையும்  இரு கைகளால் பற்றியது. சமயோசித  புத்தியுடைய இரு சகோதரர்களையும் துண்டித்தனர். அச்செயலின் விளைவாக அதற்கு நேர்ந்திருந்த  சாபத்திலிருந்து அது  விடுதலை பெற்றது. சாப விமோசனம் ஆனதும் அந்த ஜந்துவுக்குப்  பழைய நல்லறிவு  உதயமாயிற்று.

  அது சகோதரர்களிடம் .'' என்னுடைய உடலுக்குத் தீ மூட்டுங்கள் . அதற்கு  கைமாறாக நான்  உங்களுக்கு  நலன்  ஒன்று  செய்கிறேன்" என்று

அந்த ஜந்து வேண்டிக்கொண்டது.  அதன் விருப்பத்தை  நிறைவேற்றினர்  சகோதரர்கள்.

   சுடர்விட்டு  எரிந்த  நெருப்பினின்று  கபந்தன் என்னும்  பிரகாசம் வாய்ந்த வடிவம்  ஒன்று  வெளிக்கிளம்பிற்று. அது  பேசலாயிற்று. ''ராமா. நீ

சீதையை  மீண்டும் பெருவாய். அதற்கு பம்பா நதிகரையோரம்  செல்வாயாக. அதற்கு அருகில்  ரிஷ்யமுகம் என்னும் மலை உன்று இருக்கிறது.

 அதன் மீது சுக்ரீவன்  வசித்து வருகிறான். அவன் உனக்கு  தேவையான  உதவியை  அவன்  செய்து  சாதிப்பான்."  அதன்  பிறகு  அவர்கள்  இருவரும்  பல நாட்கள்  பயணம்  செய்தார்கள்.  கிஷ்கிந்தை நாட்டை அடைந்தார்கள்.  அங்கே ரிஷ்யமுக மலை இருந்தது.

சுக்ரீவனுடன்  நட்பு

  ரிஷ்யமுக  மலையின்  உச்சியில்  இருந்த  சுக்கிரீவன் அவர்களைப்  பார்த்தான்.  குரங்கு  அரசனான  அவன்  '' இவர்கள்  அண்ணன்  வாலியின்

ஆட்கள் . என்னைக்  கொல்ல  வருகிறார்கள்"  என்று நடுங்கினான்.

    அருகில் இருந்த  அமைச்சன்  அனுமன்.'' ஐயா!  நீங்கள்  யார்? எதற்காக  இங்கு வந்தீர்கள்? ஏதேனும் உதவி தேவையாயின்  தயங்காமல்  சொல்லுங்கள். உடனே  நிறைவேற்றுகிறோம்" என்று பணிவுடன்  சொன்னான்.

  '' பேச்சாற்றலில்  வல்லவனாக உள்ளாய்.  இனிமையாகவும்  நுட்பமாகவும்  பேசுகிறாய்.  சொல்லின்  செல்வனாகத்  திகழ்கிறாய். நீ யார்?" என்று  கேட்டான் இராமன்  குரங்குகளின்  அரசர்  சுக்கிரீவனின் அமைச்சன்  நான். என் பெயர் அனுமன்" என்றான் அவன்.

  சீதையைத் தேடித்  தாங்கள்  வந்ததை விளக்கமாகச்  சொன்னான் இலக்குவன். இதைக் கேட்ட  அனுமன் '' எங்கள்  அரசரின் உதவி  கிடைத்தால் போதும். அன்னை  சீதை  இருக்கும்  இடத்தைக் கண்டுபிடித்து விடலாம்.  ஆட்சியை  இழந்த  அவர் இந்த மலையில் ஒளிந்து உள்ளார். கீழே இறங்கினால்  அண்ணன்  கொன்றுவிடுவார் என்று  அஞ்சுகிறார். இந்த மலைக்கு அண்ணன்  வாலியால்  வர முடியாது. வந்தால் தலை வெடித்து  இறந்துவிடுவார்.  இப்படி  முனிவரின்  சாபம்  பெற்று  உள்ளார்" என்றான்.

  '' உங்கள்  அரசரும்  வாலியும்  உடன்  பிறந்தவர்கள்  என்றாய். அவர்களுக்குள்  எப்படிப்  பகை ஏற்பட்டது?"  என்று கேட்டான். இராமன்.

அரசே! எங்கள் அரசரின் அண்ணன் வாலி. அவர் பேராற்றல்  வாய்ந்தவர்.  தன்னுடன் போர் செய்பவரின்  வலிமையில்  பாதியைப்  பெறும் வரம் பெற்றவர். இராவணனைக் கட்டித் தூக்கிச் சென்றவர்.

   கிஷ்கிந்தியை  அவர் ஆண்டு  வந்தார். தம்பி  சுக்கிரீவன்  அவருக்கு  உதவியாக  இருந்தார். தம்பி சுக்கிரீவன் அவருக்கு உதவியாக இருந்தார்.

வலிமை வாய்ந்த  மாயாவி  என்ற  அரக்கன் அங்கு வந்தான். வாலியைப்  போருக்கு அழைத்தான். இருவரும் பெரிய குகைக்குள்  போர்  செய்ய முடிவு  செய்தனர்.

  சுக்கிரீவனிடம் வாலி இந்தக்  குகைக் வாயிலேயே காவல் இரு என்றான். குகைக்குள் வாலிக்கும்  மாயாவிக்கும்  நீண்ட காலம்  போர் நடந்தது.

பொறுமை இழந்த சுக்கிரீவன்.  வாலி  இறந்து இருக்க வேண்டும். மாயாவி  வெளியே வராமல்  தடுக்க வேண்டும் என்று  நினைத்தார். அந்தக் குகை

வாயிலைப்  பெரிய  பாறையால்  மூடினார். கிஷ்கிந்தை  வந்து  அரியணையில் அமர்ந்து ஆட்சி  செய்யத்  தொடங்கினார்.

 மாயாவியைக்  கொன்றார் வாலி. தன் வலிமை அனைத்தையும்  பயன்படுத்திப் பாறையைத் தள்ளி  வெளியே  பார்த்தார்.  அரியணையில் வீற்றிருந்த  சுக்கிரீவனைக்  கண்டார்.  ஆட்சிக்காக அண்ணனையே  கொல்லத்  துணிந்தாயா?  உன்னைக் கொல்லாமல் விட  மாட்டேன் என்று கோபத்துடன்  கத்தினார்.

  சுக்கிரீவன்  சொன்ன எதையும்  கேட்க  அவர் தயாராக இல்லை. அஞ்சிய சுக்கிரீவன்  இந்த  மலையில்  ஒளிந்து உள்ளார்" என்றான் அனுமன் . ''உங்கள்  அரசரோடு  நட்பு கொள்ள  விரும்புகிறேன்" என்றான் இராமன்.

    மகிழ்ச்சி  அடைந்த  அனுமன்  பெரிய  வடிவம்  எடுத்தான். அவர்களைத் தன்  தோளில்  சுமந்து  சுக்கிரீவனிடம் வந்தான்.

மகிழ்ச்சி  அடைந்த அனுமன் பெரிய வடிவம் எடுத்தான்.  அவர்களைத்  தன்  தோளில்  சுமந்து சுக்கிரீவனிடம்  வந்தான்.

 இராம  இலக்குவனர்களின்  கதையை  சுக்கிரீவனிடம் சொன்னான் அவன். இராமனும் சுக்கிரீவனும்  நண்பர்கள் ஆனார்கள். ஒருவருக்குத் துன்பம்

என்றால்  மற்றவர் உதவ வேண்டும்.  ஒருவருக்குப்  பகைவன்  மற்றவர்க்கும் பகைவனே  ஆவான். ஒருவருடைய மகிழ்ச்சி  மற்றவருடைய மகிழ்ச்சி ஆகும். இவ்வாறு  இருவரும் ஒப்பந்தம்  செய்து  கொண்டார்கள்.

வாலி  போருக்கு  வா!

             வாலியினுடைய  கொடுங்கோல்  ஆட்சியை  ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதாக இராமன்  சுக்ரீவனுக்கு  உறுதி  அளித்தான்.

         '' தமையன்  வாலிக்கு  அஞ்சி  இங்கே ஒளிந்து  உள்ளேன். என்  மனைவியையும்  அவன்  கவர்ந்து  கொண்டான். அவனைக் கொன்று

என் மனைவியை என்னிடம் ஒப்படைப்பீர்களா? என்று  கண்  கலங்கக் கேட்டான்  சுக்கிரீவன்.  அபகரிக்கப்பட்ட  மனைவியை  மீட்டெடுத்துத் தருவதாகவும் அவன்  தெரிவித்தான். அதற்கு  மேல்  கிஷ்கிந்தையின் ஆட்சியும் சுக்ரீவனுக்கு  வந்து சேரும்.

         வாலியினுடைய  வலிமை  எத்தகையது என்று  சுக்கிரீவனுக்கு  மட்டும் தான் தெரியும் . அந்த வானர வீரன் காலையில்  நீராடுவதற்காக

நான்கு திசைகளிலுமிருந்த  கடலை  நோக்கித் தாவுவான். குன்று  ஒன்றை வெறும்  கோலிக்கு நிகராகக்  கையில்  எடுத்து விளையாடுவான்.

நெற்பயிர்களை  வயல்களினின்று உருவி எடுப்பதைப் போல  காடுகளிலிருந்து  அரிய  பெரிய  மரங்களை  வேரோடு  அவன்  பிடுங்கி  எறிவான்.

துந்துபி  என்னும் அரக்கன் எருமை வடிவத்தில்  இருந்தான். அந்த துந்துபிக்கு  ஆயிரம்  யானை  பலம்  இருந்தது. அவனோடு  போர்புரிய வல்லவன்  யாருமே  நிலவுலகில்  இல்லை. அத்தகைய அரக்கன்  வாலியை  எதிர்த்து வந்து  சண்டைக்கு  அறை  கூவினான். வாலியும்  அவனுடைய  எதிர்ப்பை  உற்சாகத்துடன்  எதிர்கொண்டான்.

    போரின்  முதலிலிருந்தே  துந்துபி  வாலியின்  பிடியில்  கடுகென  பொறிக்கப்பட்டு  இறுதியில்  மாண்டு  வீழ்ந்தான். குன்றுக்கு  நிகரான  அவனுடைய  சடலத்தை  வாலி  தூக்கி  வீசினான்.  வானவெளியில்  அது  ஓசையிட்டுக்  கொண்டு  நெடுந்தூரம்  போனது. அவ்வேளையில் மதங்க

மஹரிஷி  வழிபாட்டுக்கு  ஆயத்தப்படுத்திக்  கொண்டிருந்தார்.

    அந்த  சடலத்திருந்து  சில ரத்தத்  துளிகள்  மஹரிஷியின்  மீது  விழுந்தது. கோபம் கொண்ட  மஹரிஷி . '' இந்த அடாத  செயலைச் செய்யப்பட்டவன் ஆசிரமத்துக்குள்  நுழைவானே ஆனால்  அவன் தலை  வெடித்துச்  சிதறும்" என்று சாபமிட்டார்.

  வாலியினுடைய  வீர   சாகசங்களையெல்லாம்  சுக்கிரீவன் வாயிலாக  இராமனும்  இலக்குவனும்  கேட்டு அறிந்தார்கள்.  மேலும்  சுக்கிரீவன்

சொன்னதாவது: ''தன் வலிமையை வாலி  சோதனை செய்யும் முறை  வேடிக்கையானது. வானளாவ  உயர்ந்த பெரிய  மரா  மரங்கள் ஏழு  உள்ளன.

  அவற்றில்  ஒரு மரத்தைப்  பிடித்து அவன் அசைப்பான். அந்த மரம்  மேலும்  கீழுமாக நிலைகுலைந்து ஆடும். பிறகு அதில் ஓர் இலை. காய் இருக்காது. மொட்டை  மரமாகக்  காட்சி அளிக்கும் " என்றான் சுக்கிரீவன்.

'' அந்த  மரங்கள்  இருக்கும்  இடத்திற்குச்  செல்வோம்" என்றான் இராமன். எல்லோரும்  அங்கு சென்றார்கள்.  வரிசையாக  நின்ற  ஏழு மரா மரங்களையும் பார்த்தான் இராமன்.

வில்லில் அம்பு பூட்டிக் குறி வைத்து எய்தான். என்ன  வியப்பு. ஏழு  மரங்களையும்  துளைத்துச் சென்றது  அந்த அம்பு. வியப்பில்  ஆழ்ந்தான் சுக்ரீவன்.  இராமனை  வெல்ல  எவ்வுலகிலும்  யாரும்  இல்லை என்பதை  அவன் உணர்ந்தான்.

     அடுத்தபடியாக  வாலியைத்  தாக்குவது  எங்ஙனம்  என அவர்கள். எண்ணினர்.  இராமனும். இலக்ஷ்மணனும்  சுக்ரீவனும்  கிஷ்கிந்தை  போக

வேண்டும். சுக்ரீவன்  வாலியைப்  போருக்கு  அழைக்கவேண்டும்  இருவருக்கும்  இடையில்  போர் நடக்கும்  போது இராமன்  மறைந்திருந்து வாலியின் மீது அம்பு எய்தி அவனைக்  கொல்ல  வேண்டும். இதுவே  இம்மூவரின்  திட்டமாக  இருந்தது.

    அதன்படியே  சுக்ரீவன்  கர்ஜித்து அறைகூவினான். அது  வாலியின்  காதில்  விழுந்தது.  கோபத்துடன் கோட்டையிலிருந்து  கிளம்பினான். உடன் பிறந்தார்  இருவருக்குமிடையில்  தொடங்கிய  போர்  தொடர்ந்து நிகழ்ந்து  கொண்டிருந்தது. இராமன் வாக்குக்  கொடுத்திருந்தபடி  அவனுடைய  உதவியை சுக்ரீவன்  எதிர்பார்த்துக்  கொண்டிருந்தான்.

   ஆனால்  இராமனோ  உதவிக்கு  வரவில்லை.  சுக்ரீவனுடைய  வலிமை  குறைந்து கொண்டு வந்தது. ஏதோ ஒரு போக்கில்  வாலியின் பிடியிலிருந்து நழுவிக் கொண்டு  உயிரைக் காப்பாற்றிக்  கொள்ள  ரிஷ்யமுகத்தை  நோக்கி சுக்ரீவன் ஓட்டம் பிடித்தான்.

    இராமனும். இலக்குவனும் ரிஷ்யமுகத்தை அடைந்தார்கள். தன்னை அம்பலத்தில்  விட்டுவிட்டதாகச்  சுக்ரீவன்  குறைகூறினான் இராமனிடம் .

இராமன் தன்  நிலையை  விளக்கலானார்:                 ''வடிவத்திலும் . தோற்றத்திலும் . செயலிலும்  வாலியும்  சுக்ரீவனும் ஒரே தரத்தில்  திகழ்ந்தனர். மூத்தவன் யார்? இளையவன் யார்? என்பதைக் கண்டுபிடிக்க  இராமனுக்கு இயலவில்லை. வித்தியாசம்  தெரியாமையினால் தம்பியையே  தாக்கி விட்டால்  விபரீதம்  நிகழக் கூடும்  என்பதால் தான் சுக்ரீவனுக்கு உதவ  முடியவில்லை" என்றார்.

இராமனுடைய  ஆணைப்படி  இலக்குவன் சுக்ரீவனுடைய  கழுத்தில்  பூமாலை  ஒன்றை  அணிவித்தான். அவனை அறிந்து  கொள்ள இந்த பூமாலை உதவும்  என்பது அவர்களின் திட்டம்.

   அடுத்த நாள் காலை சரியான  நேரத்தில்  சுக்ரீவன்  கிஷ்கிந்தையை  அடைந்தான்.  தனக்கு  உதவிபுரிய  வந்தவர்கள்  தக்கதோர் இடத்தில்

மறைத்து  வைத்தான். பிறகு முன்பை விட அதிகமான  சத்தத்துடன்  வாலியைப் போருக்கு  அறைகூவினான்.

    வாலிக்கு  அது எரிச்சலைத்  தந்தது. இனி  சகோதரன் என்ற சலுகை எல்லாம்  காட்டக் கூடாது என தீர்மானித்து  போரிடக்  கிளம்பினான். தனக்கு  இந்திரன்  அளித்திருந்த  தங்கச் சங்கலியை  இப்பொழுது எடுத்து  அணிந்து  கொண்டான்.  கோபக்கனலாய்  போருக்கு  விரைந்தான்.

  வாலியின்  மனைவி  தாரை  சமயோசித புத்தி  மிகக்  கொண்டவள். அவளும்  திடீரென்று  கிளம்பிக்  கணவனைக் குறுக்கிட்டுத்  தடுத்தாள். ''இறைவா!  சுக்ரீவன்  நேற்றுப்  போரில்  தோற்று  ஓடியவன். இன்று  உங்களைப்  போருக்கு  அழைக்கிறார் என்றால் இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது.

   இராம இலக்குவனர்கள்  அவருக்கு உதவி  செய்வதாக  கேள்விப்பட்டேன்.  சிந்தித்துச்  செயல்படுங்கள்"  என்றாள்.

  வாலியின்  சினந்த முகத்தினின்று  நெருப்புப்  பொறி பறந்து கொண்டிருந்தது. அவன்  கர்ஜித்ததாவது :  ''போருக்கு  அழைப்பவனிடம்  பணிந்து போவதா? இராமன் தர்மவான். தம்பிக்காக  இராஜ்யத்தைத்  துறந்தவர். அவர்  நம் குடும்ப  விவகாரத்தில்  தலையிடமாட்டார். சுக்ரீவன்  எனக்கு  மீண்டும் மீண்டும் தொல்லை  கொடுத்துக் கொண்டே  இருப்பான். அவன் ஆயுட்காலம் முழுவதும் மறக்க முடியாத பாடம் ஒன்றை அவனுக்குத் துணிச்சலாக புகட்டி விட்டு வருகிறேன். " என்றான்.

கோபம் கொண்ட புலி போன்று  வாலி கோட்டைக்கு வெளியே  வந்தான் .போர் மூண்டது. இருவரும்  கட்டிப்பிடித்து உருண்டார்கள். சுக்கிரீவன் தளர்வுறும் தறுவாயில்  பயங்கரமான அம்பு  ஒன்று  வாலியின்  நெஞ்சைப் பிளந்தது.  வெட்டுண்ட  மரம் போன்று  அவன்  வீழ்ந்தான்.

   ''உயிர் துறந்து நான் கண் மூடுமுன் உயிரை  வாங்கும்  இந்த அம்பை என்மீது  எய்த வீரனைக்  காண வேண்டும் " என்றான். இராமனும்  இலக்குவனும் கிருபையே  வடிவமென அவன் முன் காட்சி தந்தனர்.

   வாலி  தனது கேள்விக்  கனைகளை இராம இலக்குவனரிடம்  தொடுக்கலானான். ' நான் உனக்கு ஒரு தீங்கும்  செய்யவில்லை . நான் சுக்கிரீவனோடு  போரிடும்  போது  நீ ஏன் என் மீது  அம்பு எய்தினாய்?" என்றான் வாலி.  '' உன்னால்  ஆதரிக்கப்பட வேண்டிய  தம்பிக்கு  நீ  தீங்கு  விளைவித்து  இருக்கிறாய்." என்றான் இராமன்.

   '' இராமன் எப்பொழுதுமே மக்களுக்கு நீதியுடனும்  அன்புடனும்  நடந்து  கொள்பவன்  என்பது  மக்களின்  பேச்சு.  ஆனால்  உன்னுடைய  தரத்தை  நான்  இப்பொழுது  காண்கிறேன். நீ  கொலைபாதகன்" என்றான் வாலி.  '' அதர்மர்கள்  என்னுடைய  அம்பிலிருந்து  தப்ப  முடியாது"  என்றான் இராமன்.

   '' உன்னுடைய  நாட்டுக்குள்ளே  நான்  அத்துமீறி  வந்தது கிடையாது. உனக்கு  எந்த  விதமான  அவமானத்தையும்  உண்டு  பண்ணியதில்லை. ஆயினும்  நீ  என் உயிருக்கு  உலை  வைத்தாய்" என்றான் வாலி.

என் நாட்டுக்குரிய  அலுவல்களைக்  கவனிப்பதோடு என்னுடைய  கடமை நின்று  விடுவதில்லை. எங்கெல்லாம் தீங்கு  தீங்கு நிகழ்கிறதோ அங்கெல்லாம்  அதை  ஒழுங்குப்படுத்த  வேண்டியது என் கடமை.  நீ  தீ நெறிக்கும்.  காமத்திற்கும்  அடிமைப்பட்டவன்" என்றான் இராமன். '' காணாமல்  போன  சீதையை  மீட்டெடுப்பதற்குத்  தானே  நீ சுக்ரீவனோடு  நட்புப்  பூண்டுள்ளாய்?"  என்றான்  வாலி.

  ''ஆம்  அது தான் விஷயம் நாங்கள்  என்றும்  நண்பர்களாயிருக்க உறுதிப்பாடு  கொண்டுள்ளோம்."  என்றான் இராமன்.  '' நீ ஏன் என்னை  மறைந்திருந்து  அம்பு ஏய்தி  வீழ்த்தினாய்? இது அரச மரபு  அன்று. நெறி தவறிய  நீ  குற்றவாளியா? அல்லது நானா?" என்றான் வாலி.

  '' வாலி! தம்பி  மனைவியைக்  கவர்ந்த  நீயா   அறத்தைப் பற்றி  பேசுகிறாய்? அறத்தை நிலைநாட்டவே உன்னைக் கொன்றேன்" என்றான் இராமன்.

  வாலி சிறிது சிறிதாக மயக்க நிலை எய்தினான். கொஞ்ச நேரத்தில்  அவனுக்கு  நினைவு வந்தது. தன் தவறை  உணர்ந்தான் வாலி. தன் மனைவியையும் . மகன் அங்கதனையும்  இராமனிடம்  ஒப்படைத்தான்.  சுக்ரீவனை  பக்கத்தில்  அழைத்தான் வாலி.  '' சுக்ரீவா! நீயே  கழஷ்கிந்தையை ஆட்சி செய். இராமனின் உள்ளம் கோணாமல்  நடந்து கொள்" என்றான். அவன் மூச்சு  நின்றது. 

  கிஷ்கிந்தை  அரியணையில்  அமர்ந்தான்  சுக்கிரீவன்.  இராமனிடம்  அவன்.  '' இப்பொழுது  மழைக்காலம்.  யாரும் எங்கும்  இயங்க முடியாது.

நான்கு மாதங்கள்  கழியட்டும். அதன் பிறகு  குரங்குப்  படையை  அனுப்புகிறேன். சீதை  எங்கே  இருந்தாலும்  அவர்கள்  தேடிக்கண்டுபிடிப்பார்கள்"

என்றான். நான்கு மாதங்கள்  கழிந்தன. சுக்கிரீவன் தாமதம் செய்வதைக்  கண்டு  கோபம்  கொண்டான்  இராமன். இலக்குவனைச் சுக்கிரீவனிடம் அனுப்பினான்.

கோபத்துடன்  வந்த  இலக்குவனைத்  தாரை  அமைதிப்படுத்தினாள்.  சுக்கிரீவனின்  ஆணைப்படி  எண்ணற்ற குரங்கு   வீரர்கள் இராமனிடம்  வந்தார்கள்.  கடல் போன்ற  அந்தப்  படையைக் கண்டு  இராமன்  மகிழ்ந்தான்   சுக்கிரீவன்  அந்த  வீரர்களைப்  பல  பிரிவுகளாகப்  பிரித்தான். சீதையைத்  தேடி  வருமாறு  நாலா பக்கமும்  அனுப்பினான்.

அனுமன் புறப்பட்டான்

    அங்கிருந்த  அனுமனைப்  பார்த்தான் சுக்கிரீவன்.  '' அனுமனே!  வலிமையிலும்  அறிவிலும்  உனக்கு  இணை யார் இருக்கிறீர்கள்?  எந்தச் செயலில்  நீ  இறங்கினாலும்  வெற்றியே பெறுவாய். சீதையைத்  தேடிக்  கண்டுபிடிக்கும் முயற்சியில்  உன்னையே நம்பி  உள்ளேன்" என்றான்.

     இதைக் கேட்ட  இராமன் அனுமனை அருகே  அழைத்தான். தன் விரலில் இருந்த  கணையாழியைக் கழற்றி அவனிடம் தந்தான்.

    '' அனுமனே!  நீ  சீதையைக் கண்டுபிடிப்பாய் என்ற  நம்பிக்கை எனக்கு உள்ளது.  இந்த  மோதிரத்தை சீதையிடம்  காட்டு. உன் மீது அவள் எந்த ஐயமும்  கொள்ள மாட்டாள்" என்றான்.

    எல்லோரையும் வணங்கிய  அனுமன்  '' நான் தெற்கு திசை நோக்கிச்  செல்கிறேன்" என்றான். அவனுடன் வாலியின் மகன் அங்கதனும்  அமைச்சன்  ஜாம்பாவானும் சேர்ந்து  கொண்டனர். எண்ணற்ற  குரங்குப்  படை துணை வர  அவர்கள் புறப்பட்டார்கள்.

தெற்கு  திசையில் இருந்த காடுகளிலும் மலைகளிலும்  சீதையைத்  தேடினார்கள். பல  நாட்கள்  கடந்தன. அப்படியே தேடிக்  கொண்டேஅவர்கள் கடற்கரையை  அடைந்தார்கள்.

   ''ஐயோ! இனி  எங்கே சென்று தேடுவது?  சீதையைக்  கண்டுபிடிக்க  முடியவில்லையே.  வெறுங்கையுடன் கிஷ்கிந்தை  செல்வதா? அதைவிட இங்கேயே  இறந்துவிடலாம்"  என்று  புலம்பினான் அங்கதன்.

   எல்லோரும்  உண்ணா  நோன்பிருந்து  உயிரை  விட முடிவு  செய்தனர். அவர்கள்  பேசியதை மலைக்  குகையிலிருந்த கழுகு ஒன்று  கேட்டது.

சிறகு ஓடிந்திருந்த அது  அவர்கள் அருகில் வந்தது. ''நான்  பல நாட்களாக  பட்டினியால்  வாடுகிறேன். உங்களைக்  கொன்று தின்னப்  போகிறேன்" என்றது.

  அதற்கு  அங்கதன் '' எங்களை ஒரே அடியில் கொன்றுவிடு. நாங்கள் பெருமைபட என்ன  உள்ளது?  ஜடாயுவைப்  போல இராவணனை எதிர்த்தா நாங்கள்  சாகப் போகிறோம்" என்றான்.

  சடாயுவின்  பெயரைக்  கேட்டுத்  திகைத்தது அந்தக்கழுகு.  ''ஐயா! நீங்கள் யார்? நான்  ஜடாயுவின்  அண்ணன் சம்பாதி.  என் தம்பிக்கு என்ன நேர்ந்தது?" என்று  கேட்டது.  இராவணனால் சடாயு கொல்லப்பட்டதை  விளக்கமாகச்  சொன்னான் அங்கதன்.

  ''ஐயோ! தம்பி! என்னை விட்டுப்  போய் விட்டாயா?  உன்னை  இராவணன் கொன்றானா? அறியாமல் போனேனே. அந்தக் கொடியவன் சீதையைத் தூக்கிச் சென்றதைப்  பார்த்தேனே. அவனைத் தாக்கிக்  கொன்று  இருப்பேனே.

   இளமையில் நீயும் நானும் ஒன்றாகப் பறந்து  கதிரவனை  நெருங்கினோம். மேலே பறந்து என்  இறக்கையால் உன்னைக் காத்தேன்.  கதிரவனின் வெப்பம் என் இறக்கைகளை  எரித்து விட்டது. கீழே விழுந்த நான் அன்றிலிருந்து இங்குதான் இருக்கிறேன்" என்று  புலம்பியது.  சீதையைப் பற்றிய செய்தியைக்  கேட்ட  குரங்குகள் மகிழ்ந்தன.

சீதையை  இராவணன் தூக்கிச் சென்றதை  நீ  பார்த்தாயா?  அவன் எங்கே போனான்?"  என்று  கேட்டான் அனுமன்.

    '' கடல்  கடந்து  இலங்கைக்கு  விமானத்தில்  சென்றான்"  என்றது சம்பாதி . அப்பொழுது  அதிசயம் ஒன்று  நிகழ்ந்தது. சம்பாதியின் இறக்கைகள்  முளைத்தன. இதைக் கண்ட  குரங்குகள் வியப்பில் ஆழ்ந்தன.

   '' சிறகுகள்  எப்பொழுது  முளைக்கும்  என்று முனிவர் ஒருவரிடம் கேட்டேன்.  நீ இராமருக்கு  உதவி  செய்யும்  போது முளைக்கும் என்றார். அதன்படியே நடந்தது. உங்கள்  முயற்சி வெற்றி பெரும்." என்று வாழ்த்தி விட்டு அங்கிருந்து பறந்தது சம்பாதி.

    சீதை இருக்கும் இடம்  தெரிந்து விட்டது. இனி கவலை இல்லை என்று மகிழ்ந்தன குரங்குகள் .  அனைத்தும் ஆராவாரத்துடன் கடற்கரையை அடைந்தன. எல்லையற்ற கடலைப் பார்த்தன. மறுகரை  தெரியவில்லையே. இவ்வளவு பெரிய  கடலை  யாரால் தாண்ட முடியும் என்று திகைப்பு அடைந்தன.  அவர்களைப்  பார்த்து  ஜாம்பாவான்  ''கவலை  வேண்டாம்.  இந்தக்  கடலைத்  தாண்டும்  பேராற்றல் அனுமனுக்கு  உண்டு" என்றான்.

  சோர்ந்திருந்த  அனுமனைப்  பார்த்து. ''  உன் ஆற்றல்  உனக்குத் தெரியாது. நீ குழந்தையாகத் தாயின்  மடியில்  விளையாடிக்  கொண்டிருந்தாய்.

வானத்தில்  தோன்றிய  கதிரவனைப் பழம் என்று நினைத்தாய். அதை அருகில்  பறந்து சென்றாய். கதிரவனால்  தாக்கப்பட்டு  மயக்கம் அடைந்தாய்.

   இதனால்  உன் தந்தை  காற்றுக்  கடவுள்  கோபம்  கொண்டார். எங்கும்  காற்று வீசவில்லை. தெய்வங்கள் அனைத்தும் வந்து  உன்  தந்தையை அமைதிப் படுத்தினார்கள். உன்  மயக்கத்தையும்  தெளிவித்தார்கள்

  அனுமனே!  பேராற்றல்  வாய்ந்தவன்  நீ உன்னால்  செய்ய  இயலாத செயலே இல்லை. இந்தக் கடலை உன்னால்  எளிதில்  தாண்ட முடியும்" என்றான்  ஜாம்பாவான்.

  இதனால் புத்துணர்ச்சி  பெற்ற  அனுமன் பெரிய வடிவம்  எடுத்தான். அருகிலிருந்த  மகேந்திர மலையின் மீது தாவி ஏறி நின்றான். அங்கிருந்து ஒரே தாவாக  இலங்கையை நோக்கித் தாவினான்.  கடலின்  மீது வேகமாகப்  பறந்து  சென்றான்.

 அசோக  வனத்தில்  சீதை

    கடலைத் தாண்டிய அனுமன்  இலங்கைக்கடற்கரையில் இறங்கினான். தன் வடிவத்தைச்  சிறிதாக்கிக் கொண்டான். இலங்கைக் கோட்டைக்குள்  நுழைய  முயன்றான்.

   லங்காதேவி  என்னும்  மாது  ஒருத்தி  அந்த  ராஜ்யத்தைப்  பாதுகாப்பவளாக இருந்தாள்.  அவளுடைய தெளிந்த கண்  பார்வையிலிருந்து அனுமனால்  தப்பிக்க  முடியவில்லை.

 '' நீ  யார்? எதற்காக இங்கு வந்துள்ளாய்?" என்று  அவள் அதட்டி  வினவினாள்.  '' இவ்விடத்தை  வெறுமனே  பார்க்க  வந்துள்ளேன். பார்த்தபின்  நான் அப்பால்  போய்விடுவேன்" என்றான் அனுமன்.

இதைக் கேட்ட அவள்  மிகுந்த  விசையுடன்  அனுமனின்  கன்னத்தில்  அறைந்தால். அதற்கு  எதிர்ச் செயலாக  தன்னுடைய  விரல்களை சேர்த்து

காவல்  காத்த  அவளை  ஓங்கி  அறைந்தான்  அனுமன். அவள்  தடாலென்று தரையின் மீது  சுருண்டு  விழுந்தாள்.    ஒருவழியாக  சுயநினைவுடன்  எழுந்தவள்  அனுமனிடம் .''இந்த ராஜ்யத்தை  பாதுகாத்தல்  பொருட்டு பிரம்ம தேவனால் நான்நியமிக்கப்பட்டவள்.

அப்பிரம்ம  தேவனோ  கருத்து  ஒன்றை  எனக்குச்  சொல்லி  வைத்தார். குரங்கு ஒன்றினால்  நான் அடிபட்டு  வீழ்வேனானால் என்னுடைய கடமையும் அவ்வீழ்ச்சியோடு  முடிவடைகிறது. இதைத்  தொடர்ந்து  இந்த  இலங்கை  இராஜ்யத்தின்  வீழ்ச்சியும்  ஆரம்பமாகிறது" என்றாள்.

    இதைச்  சொல்லிவிட்டு  மறைந்து  போனாள்  அவள். இப்பொழுது எந்தத் தடையும் இன்றி இலங்கைக்குள்  நுழைந்தான்  அனுமன். அரச வீதிகளைச்  சுற்றி  வந்தான். அரண்மனைக்குள் நுழைந்து  ஒவ்வோர் இடமாகத்  தேடினான்.

    அந்தப்புரத்தில்  இராவணனுடன்  மண்டோதரி  உறங்கிக் கொண்டிருந்தாள். மண்டடோதரியைச்  சீதையோ  என்று  நினைத்துக் கலக்கம்  கொண்டான்.

    ''மகிழ்ச்சியாக  இருக்கும் இவள் சீதையாக இருக்க  முடியாது" என்று  முடிவுக்கு வந்தான்.  இலங்கை மாநகர் முழுமையும் தேடி  அலைந்தான். எங்கும் சீதையைக்  காணவில்லை. ''எங்கே தேடியும்  சீதை  கிடைக்கவில்லையே. இனி  என்ன  செய்வேன்" என்று  புலம்பினான்.

     சிறிது  தொலைவிலிருந்த  அசோக  வனம் அவன் கண்களில் பட்டது. அங்கு  சென்ற அவன் ஒரு மரத்தில்  அமர்ந்தான். ஒவ்வோர் இடமாக  பார்த்துக் கொண்டே வந்தான்.

ஓரிடத்தில்  மின்னல்  ஒளி வீசுவது  போல  இருந்தது.  உற்றுக்  கவனித்தான். அங்கே  கண்ணீர்  வழிய அமர்ந்து  இருந்தாள் சீதை. சோகமே  வடிவம்  கொண்டது போல  அவள் தோற்றம்  இருந்தது.  அவளைக்  கண்ட  அனுமன்  மகிழ்ச்சி அடைந்தான். அப்பொழுது அங்கே  பெண்கள்  சூழ  இராவணன் ஆராவாரமாக வந்தான். அவனைக் கண்ட  சீதை  நடுங்கினாள்.

   '' பேரழகியே! என்  ஆசைக்கு இணங்குவதாகச் சொல். காத்திருப்பதால் எந்தப் பயனும் இல்லை. உன்  கணவன் இராமன்  இங்கு வரப் போவது இல்லை.

    யாரால்  இவ்வளவு பெரிய கடலைக் கடந்து வர  முடியும்?  தேவர்களும்  அஞ்சும்  இலங்கைக்குள்  எப்படி  நுழைய முடியும்? " என்று  பெருமை  பேசினான். அவனை  வெறுப்புடன்  பார்த்தாள் சீதை.

   '' இன்னொருவன்  மனைவியை சூழ்ச்சி செய்து தூக்கி வந்தாயே. நீயும் ஒரு வீரனா? என் கணவர் வீரம்  நிறைந்தவர். இங்கு வந்து உன்னைக் கொல்வார்.என்னை  அழைத்துச்  செல்வார்" என்றாள்.

     இதனால்  கோபம்  கொண்ட அவன் . '' என்  பொறுமைக்கும்  எல்லை உண்டு. நான் தந்த கெடு முடிய இரண்டு  மாதங்களே உள்ளன. அதன் பிறகு  என்னிடம் இரக்கத்தை எதிர்பார்க்காதே" என்று மிரட்டிவிட்டுச் சென்றான். அங்கு நிகழ்ந்ததை எல்லாம்  அனுமன் பார்த்தான்.

    '' நான் இராமரின் தூதன் என்பதை இவர் எப்படி  நம்புவார்? அதற்கு என்ன செய்வது" என்று  சிந்தித்தான். இராமனின்  கதையை இனிமையான  குரலில்  பாடத் தொடங்கினான்.    '' கணவரின்  பெருமையை  பாடுகிறார்களே? யாராக  இருக்கும்" என்று  மேலே  பார்த்தாள் சீதை.

தன்னைப்  பார்ப்பதை உணர்ந்த அனுமன் கீழே இறங்கினான். 'தாயே! அழுது அழுது மெலிந்து உள்ளீர்கள். நான் தேடி வந்த சீதா பிராட்டியாக  நீங்கள் தெரிகிறீர்கள்" என்று  பணிவுடன்  சொன்னான்.

 '' ஆம். நான் சீதை தான். என் கணவரின் வரலாறு உனக்கு எப்படி தெரிந்தது? நீ யார்?"

    '' தாயே! நான் இராமரின் தூதன். என் பெயர் அனுமன்.  அவர் கட்டளைப்படி   உங்களைத் தேடி வந்தேன்"  என்று  நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம்  சொன்னான். '' இந்தக் குரங்கும்  அரக்கியரின் மாயையோ?  என்னை ஏமாற்ற முயற்சி  செய்கிறதோ?" என்று ஐயம் கொண்டாள் அவள்.

    இதை உணர்ந்த  அனுமன். '' தாயே!  நான்  இராமரின் தூதன் தான். அவர் அடையாளமாகக்  கொடுத்த  கணையாழியைப்  பாருங்கள் " என்று

மோதிரத்தை அவளிடம்  நீட்டினான். அதைப் பார்த்த சீதையின் ஐயம்  நீங்கியது.  இராமனைக் கண்டது  போல மகிழ்ச்சி  அடைந்தாள்.

இராமணின்   தூதன்

 ஆஞ்சனேயர் ஜானகி  தேவியாரிடம்  இனி நிகழப்  போவதைத்  தெரிவித்தான். சீதா  பிராட்டியார் இருக்குமிடத்தை  இராமனிடம்  தெரிவித்தவுடனே

சுக்ரீவனுடைய  சேனையைத்  துணையாகக் கொண்டு லங்காபுரியின் மீது  அவன்  படையெடுத்து வருவான்.  கொடுங்கோல்  வேந்தனாகிய  இராவணனையும்  அவனுடைய  வமிசத்தையும் அவன்  ஒழித்துத்  தள்ளுவான். சீதா  பிராட்டியாரை அவன் மீட்டெடுப்பான். ஆகவே வரப்போகிற  செயல்களைக்  குறித்து  வாயுகுமாரன் உறுதி  கூறினான்.

இந்தச்  சிறு குரங்கு இப்படி பெருமை பேசுகிறதே. இதனால் என்ன  செய்ய முடியும் என்று  நினைத்தாள் சீதை.  சீதையின்  சந்தேகத்தை ஒருநெபடியில் சமாளிக்க ஆஞ்சனேயன் ஒரு புதிய  வழியைக்  கையாண்டான். இதை அறிந்த  அனுமன் பெரிய வடிவம் எடுத்தான். விண்ணுக்கும் மண்ணுக்குமாக  நின்றான்.

  '' தாயே! நீங்கள்  ஏன் இங்கே துன்பப்பட வேண்டும் இராமன் வந்து மீட்கும் வரை. என்  தோளில்  அமருங்கள். கடலைத் தாண்டி உங்களை இராமனிடம்  சேர்க்கிறேன்" என்றான் அனுமன்.

    வியப்பு  அடைந்த  அவள் '' அனுமனே! உன்  வடிவத்தைச்  சிறிதாக்கிக்  கொள். நான் உன்னுடன் வருவது என் கணவருக்கு  பெருமை சேர்க்காது. இராவணனை அவர் கொல்ல  வேண்டும்.  பெருமையுடன் என்னை அழைத்துச் செல்ல வேண்டும்" என்றாள்.

    தன்னிடம்  இருந்த  சூடாமனியை  அவனிடம் தந்தாள்.  '' இதை  அவரிடம்  தா. விரைந்து வந்து என்னைக் காப்பாற்ற வேண்டியதாகச் சொல்"

என்றாள். தலையில் அணியும் அந்த அணிகலனைப் பணிவுடன் வாங்கினான்  அனுமன். அவளின்  திருவடிகளை வணங்கினான்.

   அங்கிருந்து  புறப்பட்ட அவன்  தாய் சீதையின் அச்சத்தை முதலில் போக்க வேண்டும். இராவணனுக்கும் அரக்கர்களுக்கும் நடுக்கத்தை உண்டாக்க வேண்டும். என்ன  செய்வது என்று சிந்தித்தான். அந்த வனத்திருந்த மரம் செடி  கொடிகளை  வேரோடு  பிடுங்கினான். அங்கும் இங்கும் வீசி ஆர்ப்பாட்டம் செய்தான்.

   காவலுக்கு இருந்த அரக்கர்கள் இதைக் கண்டு கோபம் கொண்டார்கள்.  அனுமனைத்  தாக்க  முயன்றார்கள்.  ஆனால் ஆனுமனோ அவர்களை நையப் புடைத்தான்.

அலறியபடியே.  இராவணனிடம்  ஓடிய அவர்கள்  நடந்ததைச் சொன்னார்கள். கோபம்  கொண்ட  அவன்  தன் படைத்  தலைவர்களை அனுப்பினான்.அவர்களை அடித்துக்  கொன்றான் அனுமன். இதை  அறிந்த  இராவணனின்  கோபம்  எல்லை  மீறியது. தன்  மகன்  இந்திரஜித்தை  அழைத்தான்.

   '' அசோகவனத்தை  ஒரு குரங்கு  அழித்துவிட்டது.  அதைப்  பிடித்து  இழுத்து  வா" என்றான்.  தந்தையை  வணங்கி  புறப்பட்டான்  இந்திரஜித்.  அசோகவனமே  பாழ்பட்டு  கிடப்பதைக் கண்டு  கோபம்  கொண்டான்.

   '' ! அறபக்  குரங்கே! இலங்கைக்குள்  புகுந்தா  நாசம் செய்கிறாய்" என்று  கர்ஜித்தான். அனுமன் மீது அம்புகளைத்  தொடுத்தான்.

    வானத்தில்  பாய்ந்த  அனுமன் அந்த அம்புகளிலிருந்து தப்பினான். திகைத்த இந்திரஜித் '' சாதாரண  அம்புகள் தன்னைத்  தாக்கக்  கூடாது. இப்படி இந்தக் குரங்கு வரம்  வாங்கி இருக்க வேண்டும். பிரம்மாஸ்திரத்தை  எய்வோம். அதிலிருந்து இதனால் தப்ப  முடியாது" என்று முடிவு செய்தான்.

   பிரம்மாஸ்திரத்தால்  தாக்கப்பட்ட அனுமன்  மயக்கம்  அடைந்தான். உடனே  அரக்கர்கள்  அவனைப்  பெரிய  கயிற்றால்  கட்டினார்கள். அரசவைக்கு  இழுத்து  வந்ததார்கள்.

   அரியணையில்  வீற்றிருந்த  இராவணன் கோபத்துடன் அனுமனைப்  பார்த்து. ''யாரடா நீ? இங்கு எதற்காக வந்தாய்?" என்று  அதட்டினான். ஏறிட்டுப்  பார்த்த  அனுமன். சீதையைத்  தேடி புறப்பட்ட  குரங்குகளில்  நானும்  ஒருவன்.

   உன்னால்  சிறை  வைக்கப்பட்ட  சீதை  பிராட்டியைக்  கண்டேன். உடனே  அவரை  இராமரிடம்  சேர்த்துவிடு. இல்லையேல்  நீயும்  அரக்கர்களும்  சாவது உறுதி" என்றான்.

இராவணனின் கண்களில் தீப்பொறி  பறந்தது. '' மூவுலகமும்  என்னைக் கண்டால்  நடுங்கும்  என்னிடமே இப்படி  பேசுகிறாயா? அரக்கர்களே!

இந்தக்  குரங்கைத் துன்புறுத்திக் கொல்லுங்கள் " என்று  கட்டளை இட்டான்.  '' அவையில்  இருந்த  இராவணனின்  தம்பி  விபீஷணன்.  '' அரசே!  தூதனைக்  கொல்வது  முறையன்று.  அப்படிச்  செய்தால்  நமக்குப் பெரும்பழி  நேரும்" என்றான்.

    தம்பி  குறுக்கிட்டதை  இராவணன்  விரும்பவில்லை. '' இந்தக் குரங்கின்  வாலில்  துணியைக்  கட்டுங்கள். அதில்  எண்ணெய் ஊற்றி  நெருப்பு வையுங்கள்.  வால்  எரிகின்ற  வேதனை  தாங்காமல் இது துடிக்க  வேண்டும்" என்றான்.

   அரசரின்  கட்டளையை ஏற்ற  அரக்கர்கள் அனுமனை  இழுத்துச் சென்றார்கள்.  அதன்  நீண்ட வாலில் ஏராளமான  துணிகளைக்  கட்டினார்கள்.

  அந்தத் துணிகளில்  பீப்பாய்  பீப்பாயாக எண்ணெயை ஊற்றினார்கள். பிறகு  அதில்  நெருப்பு  வைத்தார்கள் . இந்தக் கொடுமையை அரக்கியர்கள்  மகிழ்ச்சியுடன் சீதையிடம்  சொன்னார்கள்.

 

    உள்ளம்  பதைத்த  சீதை. தீக் கடவுளே!  அனுமனை எரிக்காதே.  அவனுக்குக்  குளிர்ச்சியாக இரு" என்று  வேண்டினாள். என்ன வியப்பு! வாலில்  பற்றிய  தீ  அனுமனை  சிறிதும்  சுடவில்லை.  தண்ணென்று குளிர்ச்சியாக  இருந்தது.

விபீஷணனின்  அடைக்கலம்

    இந்தக்  கொடிய  அரக்கர்களுக்கு  நல்ல பாடம்  கற்பிக்க வேண்டும். என்ன செய்வது என்று சிறிதாக்கிக்  கொண்டான்.  கட்டுகளிலிருந்து வெளியே  வந்தான்.

விடுதலை  பெற்ற  அவன்  அங்கிருந்த  மாளிகைகளின் மேல் தாவினான். வாலில்  எரிந்த  தீயால்  ஒவ்வொரு  மாளிகையாகக்  கொளுத்தினான்.

  இலங்கை  மாநகரமே  தீப்பற்றி  எரியத்  தொடங்கியது. எங்கும்  அழுகையும்  அலறலும்  கேட்டன.  எண்ணம்  நிறைவேறியது என்று  மகிழ்ந்த  அனுமன்  கடற்கரைக்குச்  சென்றான். தன் வாலைத்  தண்ணீருக்குள்  விட்டான். தீ  அணைந்தது.

  அங்கிருந்து  கடலைத்  தாவி  மகேந்திர  மலையை  அடைந்தான் .அனுமனைப் பார்த்த குரங்குகள்  மகிழ்ச்சி  ஆராவாரம்  செய்தன.

   அக்கூட்டத்தில்  வயதில்  மிக மூத்தவன்  ஜாம்பாவான். தன்னுடைய  கருத்தையும்  அவன்  தெரிவித்தான். '' இராமனையும்  சுக்கிரீவனையும்

நெடுநாள்  ஆவலில்  காத்திருக்க  வைப்பது  நல்லதல்ல.  அனுமன் சாதித்தது அற்புதச் செயலாகும்.  அவன்  சாதித்திருப்பதே போதுமானது.  அடுத்து  எச்  செயலை  எங்ஙனம்  சாதிப்பது என்பதை  வேந்தர்களாகிய  அவர்கள்  இருவருமே முடிவு  எடுக்கட்டும் " என்றான் ஜாம்பாவான்.

   இதை எல்லோரும்  ஒருமனதாக எல்லோரும் ஏற்றுக்  கொண்டனர். குரங்குக் கூட்டம்  இப்பொழுது குஷியாகக்  கிஷ்கிந்தையை நோக்கிப் பறந்து சென்றது.

   எல்லாக் குரங்குகளும்  இராமன்  இருந்த இடத்தை அடைந்தன. இராமனைப் பணிவாக வணங்கிய அனுமன். ''கண்டேன் கற்பரசிசீதையை"என்றான்.  தான்  அடையாளமாகக்  கொண்டு  வந்த  சூடாமணியைத்  தந்தான். அதைப்  பார்த்தான் இராமன். '' !  சீதை! உன்னைப் பிரிய  நேர்ந்ததே. என்ன  செய்வேன்? என்று விம்மி விம்மி  அழுதான்.

சிறிது  நேரத்தில்  உள்ளம்  தேறிய  அவன்.  '' அனுமனே!  யாரும்  செய்யாத  உதவியை  எனக்கு  செய்து உள்ளாய். இதற்கு என் கைமாறு செய்யப்  போகிறேன்"  என்று  அனுமனை  அன்புடன்  கட்டித்  தழுவினான். இந்தக்  காட்சியைப்  பார்த்து  எல்லோரும்  கண்  கலங்கினார்கள்.

   அரசன்  சுக்கிரீவன். '' கடல்  போன்ற  குரங்குப் படை தயாராக உள்ளது. இலங்கையை  நோக்கி எப்பொழுது புறப்படலாம்?  சொல்லுங்கள்" என்று  கேட்டான்.

   ஒரு நல்ல நாளில்  குரங்குப்  படை  ஆராவாரத்துடன் புறப்பட்டது. பல நாட்கள்  பயணத்திற்குப்  பின்  கடற்கரையை அடைந்தது.

    '' படை வீரர்கள் களைப்பு  அடைந்து உள்ளனர். சில நாட்கள்  அவர்கள் இங்கே தங்கட்டும். கடலை  எப்படிக்  கடப்பது என்று ஆராய்வோம்" என்றான்  இராமன். அதன்படியே  குரங்குப் படை தங்கியது.

   அங்கே  இலங்கை  அரியணையில் இராவணன் வீற்றிருந்தான். அவனை வணங்கிய  ஒற்றர்கள் '' பேரரசே!  கடலின்  அக்கரையில்  பெரிய  குரங்குப்படை  உள்ளது.  இன்னொரு கடலைப்  போல அந்தப்  படை காட்சி  தருகிறது.  இராம இலக்குவனர்கள் தலைமை  தாங்கி  வந்துள்ளனர். நம்மோடு  போர் புரிய உள்ளார்கள்.  கடலைக்  கடக்க  வழி  தேடுகிறார்கள்" என்றான்.

     இதைக்  கேட்ட  இராவணன்  அவையினரைப்  பார்த்தான். '' போர் நிகழ  உள்ளது.உங்கள்  கருத்து   எதுவானாலும  தயங்காமல் செல்லுங்கள்"  என்றான்.

    '' பேரரசே!  நம்மைக் கண்டு  தேவர்களும்  நடுங்குகிறார்கள்.  அந்தப் படை இங்கு வரட்டும். ஒரு நொடிக்குள்  எல்லோரையும்  அழிப்போம்" என்று சிலர் வீரம்  பேசினார்கள்.

விபீஷ்ணன்  எழுந்தான். ''பேரரசே! இராமனின்  வலிமையைக்  குறைத்து மதிப்பிடக் கூடாது. தூதனாக  வந்த  அனுமன்  இலங்கையையே  தீக்கிரையாக்கிவிட்டான்.  நம்மால்  அவனை என்ன  செய்ய முடிந்தது?   சீதையைத்  திரும்ப  ஒப்படையுங்கள். இராமனுடன் நட்பு  கொள்ளுங்கள். வேறு  வழி இல்லை" என்றான்.

  இன்னொரு  தம்பி கும்பகருணன்  எழுந்தான்.         ''பேரரசே!   இராமனைக்  கொன்ற  பிறகே  சீதையைத் தூக்கி  வந்திருக்க  வேண்டும்.  பழி  ஏற்படும்படி  நடந்து கொண்டீர்கள்.

  சீதையைத் திரும்ப ஒப்படைத்தால்  நம் நிலை தாழ்ந்துவிடும். அவர்களோடு  போரிடுவதே  நாம் செய்யத்  தக்கது.  நானே அந்த இராம இலக்குவனர்களைக்  கொல்வேன். போருக்கு ஆயத்தம் செய்யுங்கள் " என்றான்.

  மீண்டும் எழுந்த விபீஷணன். ''சீதையின் வடிவில் இலங்கைக்கு  பேரழிவைக்  கொண்டு  வந்து விட்டீர்கள். சீதையை  ஒப்படைத்து  இராமனிடம்  மன்னிப்பு  வேண்டுங்கள்.  அரக்கர்கள்  அனைவரும்  அழிவதைத்  தடுத்து  நிறுத்துங்கள் "  என்று  அறிவுரை  சொன்னான்.

 

   இதைக்  கேட்ட இராவணன்  கடுங்கோபம்  கொண்டான். '' என் முன்னரே எதிரிக்கு  ஆதரவாகப்  பேசுகிறாயே.  அரக்கர் குலத்திற்கே நீ அவமானம் . தம்பி என்பதால் உன்னை கொல்லாமல் விடுகிறேன் என் கண் முன்னால் நில்லாதே" என்று சீறி விழுந்தான்.

   நல்லதற்குச்  சொன்ன  அறிவுரைகளை இவர்  கேட்கவில்லை. இனி  இங்கே இருப்பது தவறு. இராமனிடம்  அடைக்கலம் புகுவது நல்லது என்று  நினைத்தான் விபீஷணன்.

தன்  நம்பிக்கைக்கு  உரிய  தோழர்கள்  நால்வருடன்  அங்கிருந்து  பறந்தான்.  இராமன்  முகாமை  அடையப்  பயணப்பட்டனர் அந்த ஐவரும்.

அங்கதன்  தூது

 

   தங்களுடைய  முகாமை நோக்கி   வானவெளியில்  மிளிர்ந்து  கொண்டிருந்த  வடிவம்  ஒன்று  விரைந்து  வருவதைக்  கண்டான்  சுக்ரீவன். அருகில்  வந்த  போது தான் அவனுக்கு  தெரிந்தது அவர்கள்  ஐவரும்  ராக்ஷ்சர்கள். அவர்களுள்  ஒருவன்  தன்னை  இராவணனின்  கடைசி  சகோதரன்  விபீஷணன் என்று அறிமுகம்  செய்து  கொண்டான்.சீதையை அபகரித்தது

 பற்றிய  தனது  கருத்துக்களை  சுக்கிரீவனிடம்  உரைத்தான் வீடணன். மேலும்  தான்  இராமனிடம்  அடைக்கலம்  புக வந்த விஷயத்தையும் உரைத்தான்.

 

Add comment


(Will show your Gravatar icon)

  Country flag


  • Comment
  • Preview
Loading