Apr 15 2009

பிரிந்துவிட்ட நட்பு, சேவையும் மனைவியும்.

பிரிந்துவிட்ட நட்பு
காத்திருப்பது  கண்கள் மட்டுமல்ல, என் இதயமும்தான்.
கண்கள் தூக்கத்திற்க்காக,  நீ  கனவில் வருவாய் என
இதயம் உன் அன்பிற்காக, நீ வாசலில் வருவாய் என

------------------------------------------------------------
கடற்கரை மணலில் நம் நட்பை எழுதி வைத்தேன்
கடல் அலை வந்து எடுத்து சென்றது,
அழகான முத்துக்கள் எனக்கே சொந்தமென்று.
-----------------------------------------------------------

என் கண்ணிருக்குத்தான் எத்தனை வெட்கம்
அவர் விலகி சென்றபின்தான் வெளியில் எட்டிப்பார்கின்றது.

-----------------------------------------------------------

நீ, நான், நட்பு முவரும் ஓடிக்கொண்டு இருந்தேம்
உனக்காக நானும், எனக்காக நயும்,
விட்டுக் கொடுத்து ஓடும் போது " நட்பு"
நம்மை  வென்று விட்டது

----------------------------------

மேல் இருக்கும் இமைகளுக்கு எவ்வளவுதான் பொறாமை,
கண்  சிமிட்டாமல் உன்னை பார்க்க ஆசைப்பட்டால்.
பொறாமை உன்னைப் பார்க்கும் விழி மீதா இல்லை உன்மீதா.

------------------------------------------------------------------

இந்த உணர்வுகள் தூசியாலும், காற்றாலும் கலங்கப்படாத.
மனதினை கண்ணாடிப்போன்று பிறதிபலிக்கும் பெருங்கடல்.
----------------------------------------------------------------
நான் உன்னை பார்க்கும் பொழுது
தடுமாறக்குடாது என்பதிற்காக ,
இதயத்தை இரும்பாக்கி நின்றேன் .

அதனால் தான் என்னவோ ,
ஈர்த்துவிட்டது உன் காந்த விழிகள்
---------------------------------------------------------------

கண்ணில் பதிந்த உறவுகள் மறையலாம்
ஆனால் நெஞ்சில் பதிந்த உறவுகள்
என்றும் மறைவதில்லை,
உன் உறவைப்போல!

----------------------------------------
நினைவை கொடுத்த ஆண்டவன்,
நிம்மதியை கொடுக்க மறந்து விட்டான்!
அன்பை கொடுத்த ஆண்டவன்
ஏன் அன்பானவர்களை அருகில் வைக்க மறந்து விட்டான்.


சேவையும் மனைவியும் - ஒரு விவாதம் என் நண்பியுடன்!

கணவனுக்காக:
உன் தேவைகளை அனைத்தையும் பூர்த்தி செய்து விடுகிறேன்,
பிடித்தும் பிட்க்காமலும் எந்நேரமும்.
என் சின்ன சின்ன ஆசைகளை கூட புரிந்து கொள்ள மாறுக்கிறாய?
அடிமையாய், அமைதியாய் இருப்பதும் ஒரு சுகம்தான்,
நல்ல கணவன், நல்ல குடும்பம் என்னும் சில சொற்களுக்காக!

நான்:
எனக்கு பிடிக்கவில்லை என சொல்லும்போது,
உனக்கும் பிடிக்காது! அதற்காக காரணம் கேட்பாய்?
காரணம்....அடுத்தவற்கு பிடிக்காததை எனக்கு பிடிக்கும் என்பாய்,
இதுதான் இயற்கை!

நான்:
எதிர்பார்புகல்தன் வாழக்கை,
அதில் ஏமாற்றங்கள் கடந்தகாலம்

விளக்கம் :
நாம் வாழும் உலகம் ஒரு சக்கரம்,
அதில் நம் வளர்ச்சியும் ஒரு சக்கரம்.
வளர்ச்சியில் நம் வாழ்கையும் ஒரு சக்கரம்,
வாழ்கை என்பது மிதி இருக்கும் தூரமே தவிர,
நாம் வாழ்ந்தது அல்ல!

நடப்பன எல்லாம் நன்மைக்கே.

நண்பி :
ஞானி போல் நியாயம் பேசுகிறீர்கள்!

நான்:
நியாயத்தை பேசுபவன் ஞானிதானே.

நண்பி :
அதிகார ஆண் வர்கம்!

நான்:
நியாயம் என்பது எதிர்பார்ப்புகள்/ஏமாற்றங்கள் இல்லை என்று சொல்வதுதான்!
இது காமமாக இருந்தால் என்ன, அன்பாக இருந்தால் என்ன?

இல்ல விட்டாலும், இல்லை என்று சொல்வது நியாயமல்ல!
இதை யார் சொல்கிறார்கள் என்பதுதான் வர்கம்!


 

Add comment


(Will show your Gravatar icon)

  Country flag


  • Comment
  • Preview
Loading