Nov 18 2008

வாரணம் ஆயிரம் - Vaaranam Aayiram movie - review

வாரணம் ஆயிரம்


வாழ்க்கையிள் ஆயிரம் திருப்பஙகள் - கெளதம் மேனனின்  வேகம் இல்லாத ஓரு நல்ல முயற்சி.

நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்தார் என்பதைவிட ஒரு வாழ்க்கையின் பல அத்தியாயங்களை பிரதிபலிக்கிறார் என்றே சொல்லளாம். அதில் சில சிறப்பான நிமிடங்கள் என்றால் சூர்யாவின் பள்ளிக்கூட தோற்றம்,  தன் காதலி அமெரிக்காவில் கொல்லப்படும் போது வெளிப்படுத்தும் நடிப்பு, அதற்குப்பின் போதை்க்கு அடிமையாகும் நிலை, கடத்தல்காரர்களிடமிருந்து குழந்தையை காப்பற்றும்போது வெளிபபடுத்தும்  வேகம் மற்றும் தனது கட்டுகோப்பான தேகமுடைய   பொருத்தமான மேஐர் ராணுவ அதிகாரியின்  தோற்றம்.

கிருஷ்ணனாக நடிக்கும் அப்பா தோற்றம்,  நடிகர்  சூர்யாவின் நடிப்பு திறமையை குறைபடுத்துகிறது என்றே சொல்லளாம்.

திரு கெளதம் மேனனின் சராசரியான,  ஒரே மாதிரியான கடந்தகால வாழ்க்கையயை நினைவுபடுத்தும் முறையும் படததிற்கு  எதிர் கருத்துக்களை உருவாக்கி  இருக்கிறது.

 

ஓரு ஆழமான கருத்தை (புகை/போதை் பிடி்பபதின் விளைவுகளை ) இந்த திரைக்கதை உள் வைத்து இருப்பதும் அதை வெளிப்படுத்திய விதம் மிகவும் சிறப்பு.

 

காதலை வெளிப்படுத்தும் விதம் கெளதம் மேனனின் அனுபவம் இல்லாத அவருடைய காதல் வாழ்க்கையயை வெளிப்படுத்துகிறது. 3 மணி நேரத்தில் பல நுறு கருத்துக்களை வெளிப்படுத்த   முயற்சித்திது தேவையற்ற ஒன்று.

 

படத்தின் வேகம் - ஆமையின் வேகம்.

சூர்யாவின் தோற்றம் - கணக்கற்ற  ஒன்று

கெளதம் மேனன் - வேகத்தின் எதிர்பதம்.


கடிகாரத்தைப் பார்க்காமல் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய காதல் வாழ்க்கை கதை  ***

Movie Review : http://www.youtube.com/watch?v=C_DL3KHdqiI

 

Add comment


(Will show your Gravatar icon)

  Country flag


  • Comment
  • Preview
Loading